பிநட் அல்லது பிநட் பட்டர் எது நல்லது…? ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் பதில் இதோ

பாலிவுட் நட்சத்திரங்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜுடா திவாகர் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் நிலக்கடலையின் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடைய ஊட்டச்சத்து குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

Edited by: Saroja  |  Updated: May 15, 2019 16:19 IST

Reddit
Peanuts Vs Peanut Butter: Nutritionist Rujuta Diwekar Spills The Tea On Which Is Better

கடற்கரை, ரயில் நிலையம் என எங்கும் நீங்க மற நிறைந்திருக்கும் உணவுப் பண்டம் என்றால் அது வேர்கடலைதான்.

Highlights
  • நிலக்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லது.
  • நிலக்கடலையின் பயன்கள் மிகவும் அதிகம்.
  • டீ நேரத்தில் பிஸ்கட்டுக்கு பதிலாக நிலக்கடலை சாப்பிடுங்கள்

வேர்க்கடலை இந்தியாவின் வருடத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கக் கூடிய ஒன்று. கோடைக்காலமோ அல்ல்து குளிர்காலமாக இருந்தாலும் ஆல் டைம் ஸ்நாக்ஸாக வேர்கடலை இருக்கும். பேருந்து நிலையங்கள், தள்ளுவண்டிகள், கடற்கரை, ரயில் நிலையம் என எங்கும் நீங்க மற நிறைந்திருக்கும் உணவுப் பண்டம் என்றால் அது வேர்கடலைதான். 

கொழுப்புச் சத்து மிகுந்த இந்த வேர்கடலை சருமத்தின் அழகை மேம்படுத்துகிறது. பாலிவுட் நட்சத்திரங்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜுடா திவாகர் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் நிலக்கடலையின் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடைய ஊட்டச்சத்து குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். காலை அல்லது மாலை டீ யுடன் பிஸ்கட்டிற்கு பதிலாக நிலக்கடலை ஸ்நாக்ஸாக வைத்து சாப்பிடுங்கள் என்கிறார். 

விலைமதிப்பில்லா நிலக்கடலை எல்லா சீசன்களும் உணவுகளிலும் கலந்து சாப்பிடலாம். சட்னியாக வைத்தோ, அவுல் உப்புமா, வறுத்தோ அல்லது அவித்தோ சாப்பிடலாம்.  நிலக்கடலை எண்ணெய்யும் சமையலுக்கு பயன்படுத்தலாம். சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. 

இன்றைய நவீன கலாச்சார முறைகள் நேரடியாக நிலக்கடலையை சாப்பிடுவதை ஊக்குவிக்காமல், பிரசஸ் செய்யப்பட்ட பிநட் பட்டர் என்று நிலக்கடலையை அரைத்து சாப்பிடுவதை  ட்ரெண்டாக அறிவிக்கிறது. பிரசஸ் செய்யப்பட்ட பநட் பட்டரை கைவிட்டு நேரடியாக நிலக்கடலையை சாப்பிடுங்கள் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement