முகப்பருவா? இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்

   |  Updated: December 11, 2018 17:55 IST

Reddit
Pimple Problem? Bring This Two-Ingredient Face Pack To Your Rescue

முகத்தில் அதிகபடியாக எண்ணெய் சுரந்திருந்தால் முகப்பருக்கள் ஏற்படும். ஆண் பெண் என இருவருக்குமே முகப்பருக்கள் வரக்கூடும். முகப்பருக்கள் முகத்தில் அழகையே கெடுத்து விடும். முகப்பரு வந்தபின் முகத்தின் ஏற்படும் வடு மேலும் முக அழகை கெடுக்கக்கூடியதாக இருக்கும். மிகவும் எளிமையான சில பொருட்களை கொண்டு முகப்பருவை எப்படி போக்குவதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை
எலுமிச்சை சாறு
தேன் –ஒரு தேக்கரண்டி

செய்முறை

ஒரு பௌலில் எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.
அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முக முழுக்க தடவி 15 நிமிடங்கள் வரை வைத்து இருக்கவும்.
பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும்.

குறிப்பு: எலுமிச்சை மற்றும் தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைத்திருக்கும். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றிவிடும். சருமத்தில் எண்ணெய் சுரப்பை குறைத்துவிடும். மேலும் இதில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement