Pongal Festival 2019: தையன்று எதற்காக அரிசி, பாலை ‘பொங்க’ விடுகிறோம்..?- தெரிந்து கொள்வோமா?

pongal in 2019: நாளை தைப் பொங்கலாகவும் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலாக கொண்டாப்படும்

   |  Updated: January 18, 2019 17:22 IST

Reddit
Pongal 2019: Meaning Of The Ritual Of Letting Rice And Milk Overflow On Thai Pongal
Highlights
  • ஜனவரி 15-ல் தைப் பொங்கல் கொண்டாடப்படும்
  • உலகத் தமிழர்களால் பொங்கல் கொண்டாடப்படுகிறது
  • பொங்கலன்று பானையிலிருந்து உணவு பொங்கவிடப்படும்

தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான பொங்கல் விழா இன்று ஆரம்பித்து 18 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இன்று போகியுடன் ஆரம்பித்துள்ள பொங்கல் விழா, நாளை தைப் பொங்கலாகவும் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலாக கொண்டாப்படும். சூரியனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில் கால் நடைகளும் வணங்கப்படுகின்றன.

தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இடங்களிலும் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே காலக்கட்டத்தில்தான் இந்தியாவின் பிற மாநிலங்களில் லோகிரி மற்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும். இந்த அனைத்துப் பண்டிகைகளுக்கும் பிரதானமான ஒன்று உணவு. அனைத்து விழாக்களிலும் குளிர் காலத்தில் விளைந்த வேளாண் பொருட்களே உணவுக்குப் பயன்படுத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by young farmers (@the_young_farmers) on

லோகிரி மற்றும் மகர சங்கராந்தியில் வெல்லத்தைப் பயன்படுத்திதான் பிரதான உணவுப் பொருள் தயாரிக்கப்படும். அதேபோல பொங்கலுக்கும், வெல்லம் அரிசியுடன் சேர்த்து ‘சர்க்கரைப் பொங்கல்' செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் பொங்கல் என்னும் உணவு, வெவ்வேறு வகைகளில் செய்யப்படுகின்றன. சில இடங்களில் பொங்கல், காலை உணவாகக் கூட எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் பொங்கல், பாத்திரத்திலிருந்து வழிய விடப்படும். இது பொங்கல் விழாவுக்கே உண்டான மிகவும் சிறப்பான கொண்டாட்ட முறை.

Listen to the latest songs, only on JioSaavn.com

எதற்காக பாத்திரத்திலிருந்து பொங்கவிடப்படுகிறது?

பொங்கல் விழா என்பது வெறுமனே, தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் பண்டிகை அல்ல. அதற்கு பல நாட்களுக்கு முன்னரே கொண்டாடத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக, வீட்டுக்கு புதிதாக வண்ணம் தீட்டுவது, மாயிலை தோரணம் கட்டுவது, வாசலில் வாழை மரம் வைப்பது, கோலம் போடுவது என்று கொண்டாட்ட ஏற்பாடுகள் பல நாட்கள் நடைபெறும். ஆனால், இவை அனைத்தையும் விட தையன்று ‘பொங்க' விடப்படும் நிகழ்வுதான் மிகவும் முக்கியம்.

பால், அரிசி, வெல்லம், உலர் பழங்கள், பயிறுகள் போன்றவை, தை முதல் நாளன்று பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும். இந்த அனைத்துப் பொருட்களும் பொங்கல் வைப்பதற்கென்றே புதிதாக உருவாக்கப்பட்ட மண் பானையில் சமைக்கப்படும். திறந்தவெளியில் செய்யப்படும் இந்த உணவு, பானையிலிருந்து பொங்கும் வரை சமைக்கப்படும். செழிப்பையும், வளர்ச்சியையும் குறீயிடாக எந்த ‘பொங்கும்' வழக்கம் வலியுறுத்தும். பானையிலிருந்து சோறு பொங்கும்போது, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்' என்று முழக்கமிடுவதும் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று சொல்வார்கள். எல்லோருக்கும் நல்ல வழி பிறக்கட்டும். பொங்கலோ பொங்கல்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement