பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி??

 துர்கா பூஜை அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி விஜய தசமியாக நிறைவடைகிறது.  இந்த பூஜைகளன்று புத்தாடை உடுத்தி, சுவையான பாரம்பரிய ரெசிபிகள் செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

  |  Updated: October 01, 2019 16:37 IST

Reddit
Durga Puja: Prepare This Special Bengali Tomato Chutney At Home For Bhog
Highlights
  • பண்டிகைகளன்று சுவையான ரெசிபிகளை செய்து சாப்பிடுவது நம் வழக்கம்.
  • பூஜைகளன்று பாரம்பரிய உணவுகளை செய்து சாப்பிடலாம்.
  • சுவையான பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னியை வீட்டில் செய்து பாருங்கள்.

நவராத்திரி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் நெருங்கி கொண்டிருக்கிறது.  தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் இதுபோன்ற பூஜைகள் செய்வதில் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.  துர்கா பூஜை அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி விஜய தசமியாக நிறைவடைகிறது.  இந்த பூஜைகளன்று புத்தாடை உடுத்தி, சுவையான பாரம்பரிய ரெசிபிகள் செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  மேலும் இந்த பூஜைகளன்று சைவ உணவுகள் பலவற்றை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இனிப்பு சுவை கலந்த தக்காளி சட்னியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.clr46rag 

தேவையானவை: 
தக்காளி - 5 
உலர்ந்த திராட்சை - 11/2 மேஜைக்கரண்டி 
பேரிச்சை - 5 
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி 
மசாலா பொடி - 11/2 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 3 
இஞ்சி - 2 தேக்கரண்டி 
மாங்காய் பொடி - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - 21/2 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

Listen to the latest songs, only on JioSaavn.comசெய்முறை: 
அடுப்பில் அடி கணமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைக்கவும்.  
அதில் ஐந்து மசாலா பொடியை சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  
அதில் துருவிய இஞ்சி, நறுக்கி வைத்த தக்காளி, உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து மேலும் வதக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும்.  
தக்காளி நன்கு வதங்கும்வரை வைத்திருக்கவும்.  
பின் அதில் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, சர்க்கரை மற்றும் மாங்காய் பொடி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  
சர்க்கரை நன்கு கரையும் வரை வைத்திருந்து, இந்த கலவை கெட்டியாக வரும்வரை வைத்திருக்கவும்.  அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான பதத்தில் கிடைக்கும்வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement