மீந்துபோன ஆம்லேட்டை வைத்து, புரதம் நிறைந்த சுவையான உணவைச் செய்யலாமா.!!

முட்டையில் அதிகமான புரதம் இருப்பதால், உடலைக் கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எண்ணுபவர்களுக்கு மிகச் சிறந்த உனவாக விளங்குகிறது.

NDTV Food  |  Updated: October 15, 2019 16:42 IST

Reddit
Protein Diet: Use Leftover Egg Omelette To Make This Protein-Rich Dish For Lunch Or Dinner

ஆம்லெட் கறி ஒரு சுவையான உயர் புரத உணவு

Highlights
  • இந்த சுவையான கறியை தயாரிக்க மீதமான ஆம்லேட்டுகளைப் பயன்படுத்தலாம்.
  • முட்டை இருப்பதால், இது புரதம் நிறைந்த உணவாக இருக்கும்.
  • சுவையான ஆம்லேட் முட்டை கறியை செய்வது மிக எளிய முறை இதோ..

வேகவைத்த முட்டை குழம்பிலிருந்து இந்த உணவு வகை சற்றே மாறுபட்டதாகும். ஆமாம், இது குழம்பில் ஆம்லேட்டை சேர்த்து செய்யப்படும் புதிய உணவு வகையாகும்.

நம் தினசரி காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருக்கும். எளிதில் சமைத்து, குறைந்த நேரத்தில் தயார்செய்து சாப்பிடக்கூடிய சுவையான உணவு என்றால், அது முட்டை தான். முட்டையின் தனித்துவமே அதனை எப்படி வேண்டுமென்றாலும் சமைத்துக் கொள்ளலாம் என்பது தான். ஆம்லேட், முட்டை சான்விச் என எண்ணிலடங்கா உணவு வகைகளை செய்யலாம். எந்த வகையில் செய்தாலும் அதன் சுவையை விரும்பாதவர்கள் கிடையாது. முட்டையைக் காரமான உணவாக மட்டுமல்ல, இனிப்பு வகைகளிலும் சேர்ப்பதுண்டு. மிக முக்கியமாக கேக்குகள் (Cakes). முட்டை உணவு விரும்பிகள் அவற்றை ஒரு நாளில் எந்த நேரத்தில் கொடுத்தாலும் சலிக்காமல் உண்பார்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு முட்டை பிரியராக இருந்தால், இதோ உங்களுக்காக ஒரு முட்டை கறி உணவு.

ஆம்லேட் கறி (Omlette Egg Curry) :

ஆம்லேட் முட்டை கறியை செய்வது மிக எளிது. அதுவும், சில நாட்களில் ஆம்லேட்டுகள் மீதம் அடந்துவிட்டால், அன்று இந்த உணவு செய்ய சரியான நாளாகும். இந்த உணவு மூலம் ஒரு நாளில் உங்களுக்குத் தேவையான உயர்ந்த புரதச்சத்து நிறைந்த சுவையான உணவை எடுத்துக்கொள்ள முடியும்.

எது முட்டையை ஆரோக்கியமான உணவாக்குகிறது..?

முட்டையில் அதிக அளவிலான புரதம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். அதைத் தவிர பல ஊட்டச்சத்துக்கள் அதில் உள்ளன. முட்டையின் வெள்ளைக் கருவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள் ஏ, பி 12, டி, ஈ மற்றும் கே மற்றும் ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்துள்ளன. முட்டையில் அதிகமான புரதம் இருந்தாலும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும், உடலை கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எண்ணுபவர்களுக்கும் மிகச் சிறந்த உனவாக விளங்குகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

ஆம்லேட் முட்டை கறி ரெசிபி :

காலையில் செய்த ஆம்லேட் மீதம் ஆகிவிட்டல், அதனை அப்படியே மதிய உணவாகவும், இரவு உணவாகவும் இந்த ரெசிபி மூலம் மாற்றிக் கொள்ளலாம். ஆம்லேட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு, அதை தக்காளி தொக்கு அல்லது தக்காளிக் குழம்புகளில் சேர்த்து காரசாரமாக செய்துகொள்ளலாம். இந்தக் கறியை நாண், பரோட்டா, இட்லி மற்றும் வெள்ளைச் சோற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையானதாக இருக்கும். இந்தக் கறியை அனைத்து பிரியாணி வகைகளுடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement