கட்டுக்கோப்பான உடல் வேண்டுமா? அப்போ புரதச்சத்து அவசியம்!

உடற் பயிற்சியுடன் சீரான உணவு பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 05, 2018 16:07 IST

Reddit
8 High Protein Foods You Must Include In Your Diet For Fit Abs

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், உடற் பயிற்சியுடன் சீரான உணவு பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். உடல் தசைகள் ஆரோக்கியமாக, ஃபிட்டாக இருக்க சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான உடல் தசை மேம்படுத்தவும் உதவுகின்றன. எனவே, உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்தினை எடுத்துக் கொள்வது அவசியமாகும்

புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள்

1. முட்டை
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள, உணவுகளில் முட்டை சேர்த்து கொள்ளலாம். 100 கிராம் முட்டையில், 11 கிராம் புரதச்சத்து உள்ளது. காய்கறிகளுடன் சேர்த்து ஆம்லெட், பொடிமாஸ் போன்ற முட்டை வகைகளை எடுத்துக் கொள்ளலாம்

2. பீன்ஸ்
புரதச்சத்து மட்டுமல்லாது, நார்ச்சத்துக்களும் பீன்ஸில் அதிகம் இடம் பெற்றுள்ளன. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

3. மீன்
இயற்கையாகவே மீன்களில் அதிகப் புரதச்சத்து இடம் பெற்றிருக்கும். மீன் உணவுகளை வறுத்து சாப்பிவதை தவிர்த்து, குழம்பு வகை மீன்களை சாப்பிட வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்

4. கோழி
புரதச்சத்து மட்டுமில்லாமல், வைட்டமின் பி3, பி6, ஆகியவை கோழியில் உள்ளன. தேவையான அளவு கோழி உணவுகளை சேர்த்து கொள்வதினால், உடலுக்கு சத்து கிடைக்கின்றன

5. சோயா
100 கிராம் சோயாவில் 8 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும், அமினோ அமிலங்கள் சோயாவில் இடம் பெற்றுள்ளன. எனவே, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க சோயா உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்

6. பயிறு வகைகள்
ஒரு கப் சமைக்கப்பட்ட பயிறு உணவில், 18 கிராம் புரதச்சத்தும், 15 கிராம் நார்ச்சத்தும் இடம் பெற்றுள்ளன.

Listen to the latest songs, only on JioSaavn.com

7. நட்ஸ்
முந்திரி, ஆல்மண்ட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளன. மேலும், நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது

8. சீமைத் திணை
கால் கப் சீமைத் திணை உணவு வகைகளில் 8 கிராம் புரதச்சத்து இடம் பெற்றுள்ளன. அதனால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சால்ட, புலாவ் வகை உணவுகளை சமைத்து உண்ணலாம்
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement