உயர்தர புரதச்சத்து மிக்க 'பாசிப்பயறு ஸ்வீட்' ரெசிபி!

நல்ல டேஸ்ட்டாகவும் இருக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பவர்களுக்காகவே பாசிப்பயறு ஸ்வீட் ரெசிபி உள்ளது.

Edited by: Barathraj  |  Updated: July 27, 2020 12:40 IST

Reddit
Protein rich healthy moong dal fudge dessert

ஆரோக்கியமான, சுவையான உடனடியாக செய்யக்கூடிய பாசிப்பயறு ஸ்வீட் ரெசிபி

Highlights
  • விருந்துகளுக்கு பாசிப்பயறு ஸ்வீட் ரெசிபி ஏற்றது.
  • பாசிப்பயறில் எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன
  • பாசிப்பயறு ஸ்வீட் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

பாசிப்பயறு. ஆங்கிலத்தில் கிரீன் மூங்தால் எனப்படும். பொதுவாக இதில் புரதம் எனப்படும் புரோட்டீன் சத்து அதிகளவில் காணப்படுகிறது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும், உடல் உழைப்பில் உள்ளவர்களும் பாசிப்பயறு உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். குறிப்பாக ஜிம்முக்கு செல்பவர்கள் பாசிப்பயறை ஊறவைத்து முளைகட்டிய பயறாக எடுத்துக்கொள்ளவார்கள். 

ஆனால், சிலருக்கு வெறும் பாசிப்பயறு பிடிக்காது. அவர்கள் பாசிப்பயறை பலவிதமான ரெசிபிகளாக செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்றுதான் பாசிப்பயறு ஸ்வீட் ரெசிபி. இதனை மற்ற ஸ்வீட், ஸ்நாக்ஸ் ஆகியவற்றோடு சேர்த்துப் பரிமாறலாம். குறிப்பாக விருந்தினர்கள், குழந்தைகளுக்கும் வழங்கலாம். 

moong dal face packsபாசிப்பயறில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. 

ஆரோக்கியமான ஃபட்ஜ்  ரெசிபி, முழுக்க முழுக்க பாசிப்பயறைக் கொண்டே செய்யப்படுகிறது. பாசிப்பயறில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. எடை குறைப்பு, டயட்டில் இருப்பவர்களுக்கு பாசிப்பயறு உகந்தது. இதில் அதிகளவு புரோட்டீன் இருப்பதால், எலும்பு வலுப்பெறுவதற்கும் உதவுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், சைவ உணவான பாசிப்பயறில், அசைவு உணவைவிட அதிகமான சத்துகள் உள்ளது. 

பாசிப்பயறு சூப், பாசிப்பயறு சீலாஸ் என விதவிதமான உணவு பதார்த்தங்களைச் செய்ய முடியும். ஆனால், அவைகளை விட பாசிப்பயறு ஸ்வீட் ரெசிபி, பாசிப்பயறு புட்டிங் போன்றவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தப்படுவதால் நீரிழிவு பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சமில்லை. மாறாக நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி ஆகியவை உடலுக்கு நன்மை தரும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

மூங் தால் ஃபட்ஜ் தயாரிப்பது ஒரு எளிய ஹல்வா அல்லது கீருக்கு ஒத்ததாகும். முதலில், மூங் பருப்பை ஊறவைத்து, பின்னர் அரைத்து மென்மையான பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை லேசாக நெய்யில் வதக்கவும். இப்போது, ​​பால், ஏலக்காய் தூள், திராட்சையும், பாதாம் போன்ற பிற பொருட்களையும் கலவையில் சேர்க்கவும். சிறிது நேரம் லேசான வெப்பத்தில் வைத்து, அல்வா பதம் வரையில் கிளற வேண்டும். சூப்பரான, ஜூஸியான, ஃபட்ஜ் ரெடி. இதனை சூடாகவும் ஃபிரஷாகவும் பரிமாறலாம்.

கருப்பட்டி உருண்டை:
பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் அவிக்க வேண்டும். பின்பு, அதனை வடிகட்டி, சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். ஈரம் காய்ந்ததும், அவித்த பாசிப்பயறுடன், கருப்பட்டி சேர்த்து இடிக்க வேண்டும். மிக்ஸி பயன்படுத்தினால் ஒருமுறை மட்டும் மசைக்க வேண்டும். கூழ் போன்று ஆக்கி விடக் கூடாது. மிருதுவான நிலையில், உருண்டைகளாக, அல்லது அச்சில் வைத்து சதுரங்களாக பிடித்து, பரிமாறலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement