சென்னையில் வீசும் பஞ்சாப் வாசம்

  |  Updated: July 01, 2018 21:24 IST

Google Plus Reddit
Punjab food festival in chennai
சென்னையில் நேரத்தை கழிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. வாரந்தோறும், புது திரைப்படங்கள் வெளியீடு, ஷாப்பிங் மால்களில் காண்சர்ட் நிகழ்ச்சிகள், மெரினா, பெஸ்ஸி பீச்சில் சந்திப்புகள், டிஸ்கவுண்ட் ஆப்பர்கள், என செய்வதற்கு பல ஐடியாக்கள் இருந்தாலும், ஹோட்டல்களிலும், கஃபேகளிலும் கூட்டம் இல்லாத நாளே கிடையாது. பொதுவாக, வார இறுதிகளில் நடைப்பெறும் உணவு திருவிழாக்ககிலேயே அதிகம் கூட்டம் கூடுவதாக ஃபுட்டீ ஒருவர் தகவல் கூறினார்.

இந்த வார உணவு திருவிழாக்களின் ஸ்பெஷலாக சென்னை பக்கம் பஞ்சாப் வாசம் வீசியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். சென்னை அண்ணா சாலை கோர்டியார்ட் பை மாரியட் பப்ரிக்கா கஃபேயில் ‘பஞ்சாபி உணவு திருவிழா’ நடைப்பெற்று வருகிறது.
 
food festival

செஃப் லக்கி சிங் தயாரித்து வழங்கும் உணவுகளில், பஞ்சாப் சுவை அள்ளுகிறது. நாம் வழக்கமாக சாப்பிடும் சுண்டல், சிக்கன், மட்டன், சப்பாத்தி, குல்ச்சா, லஸ்ஸி, மில்க் சுவீட், கேக், ஐஸ்கிரீம்களில் பஞ்சாபி ஸ்டைலில் சமைத்திருப்பது தான் இந்த உணவு திருவிழாவின் ஸ்பெஷல்.கண்டிப்பாக சுவைக்க வேண்டியவை

அம்ரித்சாரி லஸ்ஸி:

கோடைக்காலத்திற்கு அதிக ஜூஸ், லஸ்ஸி வகைகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள் அம்ரித்சாரி லஸ்ஸியை ருசித்து பாருங்கள். பாதாம், சீக்ரட் எசென்ஸ், தயிர் ஆகியவற்றை சேர்த்து பஞ்சாபி சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
 
food festival

சாட் கார்னர்:

மசலாக்கள் அதிகம் நிறைந்த பஞ்சாபி வகை உணவுகளில், சாட் உணவுகள் சுவையானதாக இருக்கும். பானி பூரி, புதினா சட்னி, சென்னா சாட், பராத்தா சோலே ஆகியவை கண்டிப்பாக சுவைக்க வேண்டியவை.
 
food festival

சப்பாத்தி சைட்ஸ்:

Commentsசப்பாத்தி, பரோட்டாவுடன் தொட்டுக்கொள்ள செய்யப்படும் சைட்-டிஷ்களின் வேறுப்படும் சுவைகளிலேயே வெவ்வேறு மாநிலங்களின் சுவை உள்ளது. பஞ்சாபி ஸ்பெஷல் சைட்ஸாக அம்ரித்சாரி பர்தா (முட்டை கிரேவி) குக்கத் மஸ்லேடர் (கோழி மசாலா) ஆகியவை சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 
food festival

பஞ்சாபி உணவு திருவிழா ஜூன் 29 முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை, தினமும் மாலை 7.30 மணி முதல் 11 மணி வரை நடைப்பெற உள்ளது.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Related Recipe

Advertisement
Advertisement