லாக்டவுன் நேரத்தில் சீன சாஸ் செய்ய தெரிந்துகொள்ளுங்கள்!

சீன சமையல் கலையின் அருமையான சாஸ் தயார். உண்மையில் நாம் நினைத்ததை விடவும் சாஸ் தயாரிப்பது மிக எளிதுதான். உருளைக் கிழங்கு சிப்ஸ், வறுத்த கபாப்ஸ் மற்றும் பலவகை உணவுகளோடு இந்த சாஸை பயன்படுத்திக்கொள்ளலாம்.

NDTV Food  |  Updated: June 05, 2020 13:56 IST

Reddit
Quick And Easy Sweet And Sour Sauce Recipe For All Your Chinese Meals

இனி வீட்டிலேயே சீன சாஸ் செய்யலாம்

Highlights
  • Pair your Chinese meals with sweet and sour sauce.
  • This is a quick and easy recipe to make Chinese sauce.
  • Make this sauce at home and pair it with different meals.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக லாக்டவுனை அரசு அறிவித்துள்ளது. இக்காலக்கட்டங்களில் உங்கள் வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து புதியதாக சமையலை பழகுங்கள். காலங் காலமாக பெண்களே ஆக்கிரமித்துருக்கும் சமையலையை ஆண்கள் தங்களுக்கானதாக சரிபாதி பகிர்ந்துக்கெளாள்ள இந்த லாக் டவுன் காலக்கட்டம் நமக்கு நிச்சயம் உதவும்.

“மீன் பிடித்துத்துருவதைக்காட்டிலும், அதை பிடிக்க கற்றுத்தருவதே சிறந்ததாகும்“ என்கிற சீன பழமொழி உலகப் புகழ்பெற்றது. அந்த வகையில் நீங்கள் விரும்பி உண்ணும் சீன உணவுகளை தற்போது நீங்களே தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை இந்த தொகுப்பில் இணைத்துள்ளோம். உண்மையில் சீன உணவு முறைகளில் நம் உள்ளூர் உணவு முறை போலவே சை டிஷ் பயன்படுத்தப்படுகிறது. சாஸ்தான் அதிகமான உணவுடன் சேர்த்து சீனாவில் உண்ணப்படுகிறது. ஆனால், சாஸ் தயாரிப்பது சற்று கடிணமான வேலைதான்.

எல்லா சீன உணவு பொருட்களுக்கும் பொருந்துவதை போல இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு பிரத்தியேகமான சாஸை நாம் தற்போது தயாரிக்க போகிறோம்.

(Also Read: How To Make Sweet-Chilli Mango Sauce At Home For An Exotic Meal)

e0gua8c8

Whole red chillies are used to make sweet and sour sauce. 

தேவையான பொருட்கள் -


2 முழு காஷ்மீர் சிவப்பு மிளகாய்

அரை கப் அரைத்த தக்காளி

அரை கப் அரைத்த சிவப்பு மிளகாய்

2 டீஸ்பூன் வினிகர்

1 தேக்கரண்டி சர்க்கரை


தயாரிப்பு முறை:


சீன உணவை தயாரிக்கும் போது முழு சிவப்பு மிளகாயையும் 15-20 நிமிடங்கள் வினிகரில் ஊற வைக்கவும்.

மிளகாயை வினிகருடன் சேர்த்து, தேவையான அளவு சர்க்கரையோடு மிக்சியில் போட்டு அரைக்கவும்.

அரைத்து வைத்திருந்த மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிக்ஸியில் அரைத்த கலைவையை கலக்கி அதன் பின்னர் அரைத்து வைத்திருந்த தக்காளியையும் சேர்த்து கலக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

அவ்வளவுதான் சீன சமையல் கலையின் அருமையான சாஸ் தயார். உண்மையில் நாம் நினைத்ததை விடவும் சாஸ் தயாரிப்பது மிக எளிதுதான். உருளைக் கிழங்கு சிப்ஸ், வறுத்த கபாப்ஸ் மற்றும் பலவகை உணவுகளோடு இந்த சாஸை பயன்படுத்திக்கொள்ளலாம்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement