20 நிமிடத்தில் மசாலா சுவையுடன் சிக்கன் புலாவ்!

வீட்டில் சிக்கன் கறி செய்யும் போதும், சற்று கூடுதலாக சிக்கன் சமைக்கலாம்

  |  Updated: August 05, 2020 11:10 IST

Reddit
Quick Chicken Curry Pulao Recipe Steps

மசாலாவில் கோழிக்கறி நன்றாக ஊறிப் போய் இருக்கும். அதைச் சாப்பிடும் போது அதன் சுவையே தனி

Highlights
  • Chicken curries are a rage in India, having a huge variety
  • Chicken curry and rice is a heavenly combination
  • Here is a pulao recipe which you can cook with leftover chicken curry

Listen to the latest songs, only on JioSaavn.com

அரசி சோறும், கோழிக்கறி குழம்பும் சுவையான சாப்பாடு விருந்து ஆகும். இன்னும் சிலருக்கு இதை வாசிக்கும் போதே நாவில் எச்சில் ஊறும். அதுவும் நல்ல வேக வைத்த சிக்கன் குழம்பு, தூக்கலான வாசனையுடன், மசாலாவில் கோழிக்கறி நன்றாக ஊறிப் போய் இருக்கும். அதைச் சாப்பிடும் போது அதன் சுவையே தனி. என்னதான் பிரியாணி, குருமா வந்தாலும், கோழிக்கறி குழம்பிற்கு ஈடாகாது. அந்த வகையில் வெறும் 20 நிமிடத்தில் சுவையான சிக்கன் புலாவ் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். 

பொதுவாக ரெஸ்டாரன்டுகளில் அதிகம் ஆர்டர் செய்யப்படுவது சிக்கன் கறிதான். குறிப்பாக மெயின் டிஷ்ஷை விட சைடிஷ் சிக்கன்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதே போல், வீட்டில் சிக்கன் கறி செய்யும் போதும், சற்று கூடுதலாக சிக்கன் இருந்துவிட்டால், அதை வைத்துச் சிக்கன புலாவ் வைக்கலாம்.

2mgsqoqo

சிக்கன் புலாவ் ரெசிபி:


சிக்கன் புலாவ் செய்வதற்கு பகுதியாக வேக வைத்த அரிசி, சிறிது தண்ணீர், உப்பு, சிக்கன் கறி போதும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அடுப்பில் வைக்கவும். சிறிது நேரத்தில் சிக்கன் வாசம் மூக்கை துளைக்கும். அப்போது வத்தல் பொடி, கறிமசாலா பொடி, சிறிது மஞ்சள்பொடி போன்ற மசாலாப் பொருட்களை சேர்க்க வேண்டும். மேலும், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மசாலா பட்டை ஆகியவற்றை லேசாக சேர்க்கவும். அதிகம் சேர்த்து விடக்கூடாது. தேவையான அளவு மட்டும் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். 

மசாலா வாசம் வந்தவுடன், அடுப்பை மிதமான சூட்டில் ஒரு சில நிமிடங்கள் வைத்திருந்தால் போதும். சிக்கன் புலாவ் ரெடி. இதோடு எலுமிச்சை துண்டுகள் வைத்து, லேசாக கொத்தமல்லி இலையை தூவிப் பரிமாறலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement