தோசை கல்லை தேர்வு செய்வது எப்படி?

தோசை வார்க்க துவங்கும்போது அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.  தோசை மாவு ஊற்றியபின் அடுப்பை சற்று அதிகப்படுத்தலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 22, 2019 12:36 IST

Reddit
Indian Cooking Tips: Quick Tip To Fix A Sticky Dosa Tawa
Highlights
  • தோசை கல்லில் மைதா மாவு கொண்டு தேய்த்து பின் தோசை வார்க்கலாம்.
  • அப்படி செய்தால் தோசை முறுகலாக வரும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தோசை வார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சுவையான ரெசிபிகளை வீட்டிலேயே தயார் செய்யவே நாம் பெரிதும் விரும்புவோம்.  இருப்பதிலேயே மிகவும் எளிமையான ரெசிபி தோசைதான்.  தோசையை மொருமொருப்பாக சாப்பிடவே அனைவரும் விரும்புவர்.  ஆனால் சில சமயங்களில் தோசை கல் சரியாக இல்லாதபோது மொருமொருப்பான தோசை தயாரிக்க முடியாமல் போகும்.  நான் தோசை தயாரிக்கும்போது, மாவு கல்லில் ஒட்டிக் கொண்டு சரியாக எடுக்க வராமல் போகும்.  அதிகபடியான மாவை தோசை கல்லில் ஊற்றும்போது, தோசை எடுக்க வராமல் போகும்.  தோசை எடுப்பதற்காக எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் எடுக்க முடியாமல் போகும்போது நீங்கள் எரிச்சலுக்கு ஆளாவீர்கள்.  தோசை கல்லை பதமாக தயார் செய்துவிட்டால் போதும்.  மொருமொருப்பான தோசையை தயாரிக்கலாம். rp28tpng

 மைதா அல்லது கோதுமையை ஒரு கைப்பிடி எடுத்து தோசை கல்லில் போட்டு ஓரங்களில் படும்படி கை விரல்களால் நன்கு தேய்க்க வேண்டும்.  நன்கு தேய்த்த பின், அந்த மாவை தோசை தவாவில் இருந்து சுத்தமாக நீக்கிவிடவும்.  கிச்சன் டவல் கொண்டு சுத்தம் செய்யவும்.  பின் தோசை வார்க்க துவங்கும்போது அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.  தோசை மாவு ஊற்றியபின் அடுப்பை சற்று அதிகப்படுத்தலாம்.  இப்படி செய்யும்போது தோசை நன்கு மொருமொருப்பாக வரும்.  சுவையான சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement