இரத்த சர்க்கரையை குறைக்க ராகி மற்றும் ஓட்ஸ் ஊத்தாப்பம் சாப்பிடலாம்!!

ராகி மற்றும் ஓட்ஸ் இரண்டிலும் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் இருக்கிறது. 

  |  Updated: September 21, 2019 13:29 IST

Reddit
Diabetes Diet: Ragi And Oats Uttapam Is Healthy And May Keep Blood Sugar Levels Stable
Highlights
  • ஓட்ஸ் மற்றும் ராகியில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறது.
  • ஊத்தாப்பத்தில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம்.
  • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.  உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் சீரற்ற தன்மையும், குறைபாடும்தான் நீரிழிவு நோயின் காரணமாக இருக்கிறது.  இன்சுலின் சுரப்பை சீராக்கக்கூடிய உணவுகளை சாப்பிடலாம்.  அல்லது இரத்த சர்க்கரையை குறைக்கக்கூடிய உணவுகளை சாப்பிடலாம்.  ராகி மற்றும் ஓட்ஸ் சேர்த்து ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்.  ராகி மற்றும் ஓட்ஸ் இரண்டிலும் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் இருக்கிறது.  மேலும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை சீராக வைத்து, இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்.  அத்துடன் காய்கறிகளையும் சேர்த்து இன்னும் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.  ராகி ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம். 0vv0f7lo

 

தேவையானவை:

ஓட்ஸ் – 1 கப்

ராகி மாவு – 1 கப்

சிவப்பு அரிசி – 1 கப்

உளுந்து – ½ கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

குடைமிளகாய் – 1

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவுசெய்முறை:

சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் உளுந்து ஆகிய மூன்றையும் 4-5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.  அத்துடன் ராகி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.  அதில் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

அடுப்பில் தவா வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 

அதில் கலந்து வைத்த மாவை ஊற்றி அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.  மூடி வைத்து வேக வைத்தால் ஊத்தாப்பம் சுவையாக இருக்கும். 

நன்கு வெந்தபின் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்கவும். Listen to the latest songs, only on JioSaavn.com

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement