ரெட் or ஒயிட் ஒயின்: உங்கள் உடல் நலத்திற்கு சிறந்தது எது?

   |  Updated: June 07, 2018 12:05 IST

Reddit
Red Wine Or White Wine: Which Is Better For Your Health?
நம்மில் பலருக்கு இந்த குழப்பம் இருக்கும், ரெட் ஒயின்  அல்லது ஒயிட் ஒயின் எதை தேர்ந்தெடுப்பது என குழப்பம். சுவையில் பார்த்தால் இரண்டுமே நம் தேர்வாக இருக்கும்,ஆனால் உடல்நலத்திற்கு எது சரியானது என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது. அதனால் இந்த இரண்டு ஒயின்களில் இருக்கும் நன்மைகளை உங்களுக்கு சொல்ல போகிறோம்.

செய்யும் முறை 

ரெட் ஒயின், கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளை கொண்டு செய்யப்படுகிறது, ஒயிட்  ஒயின் வெள்ளை திராட்சையில்  செய்யப்படுகிறது. ஆனால் இரண்டு செய்யப்படும் முறை வெவேறு. ரெட் ஒயின் தயாரிக்க சிவப்பு திராட்சைகளை ஒன்றில் இருந்து இரண்டு வாரம் ஓக் பேரலில் பதப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒயிட் ஒயின் தயாரிக்க வெள்ளை திராட்சையின் தோல் மற்றும் விதைகளை அகற்றி பலத்தை ஈஸ்டுடன் கலந்து எஃகு பாத்திரத்தில் பதப்படுத்தப்படுகிறது.
 
red wine

ரெட் ஒயின் vs ஒயிட் ஒயின் 

இரண்டிலும் நல்ல குணங்கள் உள்ளது அதில் ஒவொன்றிருக்கும் தனி தனி குணங்கள் உண்டு. பதப்படுத்திய பிறகு திராட்சைகள் அதற்கான சுவைகளை இழந்துவிடுகிறது ஆனால் சில நன்மைகள் பதப்படுத்துவதால் கிடைக்கிறது. 

ஒயிட் ஒயின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்] மற்றும் இதய நோய்களைத் தடுக்கும். அதேபோல் ரெட் ஒயினில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் ரத்தக்கட்டை தடுக்கும் அதோடு ரத்த அழுத்தத்தையும் தடுக்கும். 

wine

வெற்றி:ரெட் ஒயின்  

ஒயிட் ஒயின் போலல்லாமல், ரெட் ஒயினில்  பாலிபினால்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது சீக்கிரம் வயதாவதை தடுக்கிறது. ஒரு நாளுக்கு மிக குறைந்த அளவு ரெட் ஒயின் குடித்து வந்தால் உடல் ஆரோக்யத்திற்குநல்லது. 

Commentsஒயிட் ஒயினை விட ரெட் ஒயினே ஆரோக்கியமானது. இருப்பினும் இரண்டிலும் மது இருப்பதால் அளவோடு அருந்த வேண்டும். 

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement