மூளை செயல்பாட்டை தூண்டும் ஹெர்பல் டீ!!

தேநீர் குடிப்பதால் உணர்ச்சிநிலை மேம்படுவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.  

Edited by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: September 14, 2019 16:26 IST

Reddit
Regular Consumption Of Tea May Help Boost Brain Function: Other Health Benefits Of Tea

உலக மக்கள் அனைவராலும் எல்லா காலங்களிலும் விரும்பி குடிக்கக்கூடிய பானம் தேநீர்.  தேநீரில் ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  மேலும் சிலர் ப்ளாக் மற்றும் க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.  தேநீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்களா??  தேநீர் குடிப்பதால் மூளை செயல்பாடுகள் சீராக இருப்பதுடன் நினைவாற்றலும் சிறப்பாக இருக்கிறது.  தொடர்ச்சியாக தேநீர் குடிப்பவர்களுக்கு வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் ஞாபக குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.  தேநீர் குடிப்பதால் உணர்ச்சிநிலை மேம்படுவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.  d7enbi8g

 

 

சமீபத்தில் 36 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.  இவர்களது வாழ்வியல் முறை, ஆரோக்கியம் மற்றும் மனநலன் ஆகியவை சுமார் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்தது. கிரீன் டீ, ஓலாங் டீ, ப்ளாக் டீ ஆகியவற்றை வாரத்தில் நான்கு முறை என தொடர்ச்சியாக 25 வருடங்களாக குடித்து வந்தவர்களின் மூளை செயல்பாடு அதிகமாக இருந்தது.  தேநீர் அருந்தாதவர்களை காட்டிலும் அருந்துபவர்களின் மூளை செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.   

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com