என்னது! பால் குடிச்சா மார்பக புற்றுநோய் வருமா..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

பால் நுகர்வு மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  | Translated by: Ragavan Paramasivam  |  Updated: March 09, 2020 12:41 IST

Reddit
Regular Milk Consumption May Lead To Breast Cancer; Says Study

ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒரு கப் பால் குடிப்பது கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

Highlights
  • பால் என்பது நம் அன்றாட ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகும்.
  • இந்த ஆய்வு பால் குடித்தால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறது.
  • பால் - புற்றுநோய்க்கு இடையில் எந்த முறையான தொடர்பும் நிறுவப்படவில்லை

பால் என்பது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகும். பாலில் காணப்படும் அதிக கால்சியம் உள்ளடக்கம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை வலுப்படுத்தும். குழந்தைகளாக இருக்கும்போது நாம் அனைவரும் பாலை வெறுத்திருக்கலாம், ஆனால் நம் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி தொண்டைக்குள் ஊற்றியாவது அதைக் குடிக்கவைத்தனர், இறுதியில் நாம் அனைவரும் அதன் சுவைக்குப் பழகிவிட்டோம், ஒவ்வொரு நாளும் பால் குடிக்கும் பழக்கம் நம் இளமைப் பருவத்தில் நம்மைப் பின்தொடர்ந்தது. பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 3 கப் பால் குடிக்க வேண்டும் என்று தற்போதைய அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அது நமக்கு அதிகமாகத் தெரிக்கலாம், எனவே ஒரு நாளைக்கு ஒரு கப் தான் என அதிலேயே ஒட்டிக்கொள்கிறோம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் பால் கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அறிந்தால், நீங்கள் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள்.!

பால் நுகர்வு மார்பக புற்று நோய் அபாயத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது என   சமீபத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் நம்பப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள லோமா லிண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, ஒரு நாளைக்கு ஒரு கப் பால் குடிப்பது கூட பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறது.

சோயாவை அதிக அளவில் உட்கொண்ட பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆய்வு கூறுகிறது . பாலில் உள்ள பாலியல் ஹார்மோன் உள்ளடக்கம் அதைக் குடிப்பதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

(Also Read: 6 Effective Ways to Prevent Breast Cancer)

Listen to the latest songs, only on JioSaavn.com

நீங்கள் இப்போதே கவலைப்படுகிறீர்களா? ஒருவேளை, நீங்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆய்வை நாம் ஒதுக்கி வைத்தால், பால் பொருட்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையில் உறுதியான நேரடி இணைப்பு எதுவும் நிறுவப்படவில்லை மற்றும் நிரூபிக்கப்படவும் இல்லை. 

பாலில் சிறந்த ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. பால் நுகர்வு மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையில் ஒரு உறவை ஏற்படுத்த அதிக நியாயமான ஆராய்ச்சி மற்றும் ஆதாரம் தேவை. கவலைப்படாதீர்கள்…!

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement