உடல் எடை குறைக்க தேங்காய் மாவில் பிரட் செய்யலாம்!!

முழுகோதுமை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த மாவுகளை தவிர்த்து க்ளூட்டன் ஃப்ரீயான தேங்காய் மாவு கொண்டு ருசியான பிரட் தயாரிக்கலாம்.

  |  Updated: September 12, 2019 11:31 IST

Reddit
Weight Loss Diet: Replace Your Regular Bread With Keto-Friendly Coconut Flour Bread
Highlights
  • தேங்காய் மாவில் தயாரிக்கப்படும் பிரட்டில் கலோரிகள் மிகவும் குறைவு.
  • இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • இந்த கீட்டோ பிரட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

உடல் எடை குறைக்க கீட்டோஜெனிக் டயட்டை பின்பற்றலாம்.  கார்போஹைட்ரேட்டை முழுமையாக தவிர்த்து புரதம் மற்றும் கொழுப்புகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை தானாக குறையும் என்பதுதான் கீடோ டயட்டின் தத்துவம்.  காய்கறிகள், பழங்கள், இறைச்சிகளில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால் இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.  உடல் எடை குறைப்பதற்காக நம்மில் நிறைய பேர் சாதத்தை தவிர்த்து ரொட்டி, சப்பாத்தி, பிரட் போன்றவற்றை சாப்பிடுவார்கள்.  ஆனால் இவற்றில் இருக்கக்கூடிய மாவு பொருள் உடலுக்கு ஆபத்தாய் இருக்கலாம்.  பசியின்போது சாப்பிடக்கூடிய பிரட்டை கூட கீடோ உணவாக மாற்ற முடியும். 

முழுகோதுமை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த மாவுகளை தவிர்த்து க்ளூட்டன் ஃப்ரீயான தேங்காய் மாவு கொண்டு ருசியான பிரட் தயாரிக்கலாம்.  இதில் கார்போஹைட்ரேட் துளியும் கிடையாது.  ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த தேங்காய் பிரட் உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை கரைக்க உதவுகிறது.  இது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கொண்டு இந்த பிரட்டிற்கு ஃப்ளேவர் சேர்க்கலாம்.  இதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். 

தேவையானவை:

ஈஸ்ட் – 4 தேக்கரண்டி

முட்டை – 6

பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் – 100 மிலி

தேங்காய் மாவு – ½ கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

Listen to the latest songs, only on JioSaavn.com

முதலில் ஈஸ்டில் வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவும்.  ஒரு பெரிய பௌலில் தேங்காய் மாவு சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.  பின் முட்டை, ஆலிவ் எண்ணெய் மற்றும் கலந்து வைத்துள்ள மாவு ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஹேண்ட் பீட்டரில் அடித்து கொள்ளவும்.  ஒரு லோஃப் டின்னில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் தேங்காய் பிரட் தயார்.  உடல் எடை குறைக்க, பசி நேரத்தில் இதனை சாப்பிட்டு வரலாம். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement