உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா!?

உணவில் சேர்த்துக் கொள்ளும் பல நிறுவன பிராண்டுகளின் உப்பில், பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது, ஐ.ஐ.டி பாம்பேவைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு

एनडीटीवी फूड  |  Updated: September 04, 2018 14:10 IST

Reddit
Plastic In Major Salt Brands That You Use, Finds IIT-Bombay

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பல நிறுவன பிராண்டுகளின் உப்பில், பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது, ஐ.ஐ.டி பாம்பேவைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு. 5 மில்லிமீட்டர் டையாமீட்டர் கொண்ட அந்த பிளாஸ்டிக் துகல்கள், கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், உப்பில் தங்குவதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐ.ஐ.டி பாம்பேவின், சுற்றுச் சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இந்த ஆய்வில், நாம் சாப்பிடும் உப்பில் 626 வகை பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஒரு கிலோ உப்பில், 63 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அப்படியானால் ஆண்டுக்கு 117 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை இந்தியர்கள் உட்கொள்கிறார்கள் என்று பகீர் தகவல் அளிக்கிறது இந்த ஆராய்ச்சி.

உலகின் மிகப் பெரிய உப்பு உற்பத்தி நாடான இந்தியாவில், இந்த ஆராய்ச்சி ஒரு முக்கிய எச்சரிக்கையை தந்துள்ளது. இனி கடலில் நாம் கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை கணகாணிக்கவும், தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர், இந்த ஆராய்ச்சியாளார்கள். தொடர்ந்து மைக்ரோ பிளாஸ்டிக் துகல்களை உட்கொள்வதால், நீண்ட கால உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  SaltPlastic

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement