கடல் உணவுகளின் மஜாவுக்குத் தயாரா..?- “Residency’s Chin Chin” ரெஸ்டாரன்ட் ரிவ்யூ!

ஸ்டார்ட்டர்ஸ் பற்றி நினைத்து ‘சின் சின்’-ல் அமர்ந்திருந்தபோதுதான், முதலாவதாக வந்தது இறால் கட்லட். மல்லிப்பூ இட்லி என்று சொல்வார்களே...

  |  Updated: September 19, 2019 18:41 IST

Reddit
Residency’s Chin Chin restaurant Review

பல நேரங்களில் நம் மொத்த உணவையும் ஸ்டார்ட்டஸிலேயே முடித்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு இருக்கும்

சென்னை வாழ்க்கை என்பது பல வகைகளில் பேச்சிலர்களுக்கு சவாலானது. அதுவும் வெளிச் சாப்பாட்டை நம்பியிருப்பவர்களுக்கு நிலைமை இன்னும் மோசம். வெறும் ப்ராய்லர் கோழி சிக்கன் பிரியாணிகளையும், சிக்கன் 65-களையும் சாப்பிட்டு அடைக்களம் செய்யப்பட்ட நாக்கிற்கு எப்போதாவது தரமான சுவையை  உணர வாய்ப்பு கிடைத்தால், மழையில் விளையாடும் சின்னக் குழந்தை போல மனம் துள்ளி குதிக்கும். அப்படி எனக்கு தியாகராய நகர், ரெஸிடன்சியில் இருக்கும் ‘சின் சின்' உணவகத்தில் நடக்கும் கடல் உணவுத் திருவிழா பற்றிய தகவல் வந்தது. அன்றைய தினமே காலை, மதியம் பழவகை உணவுகளை மட்டும் சாப்பிட்டு, மாலை டின்னருக்கு முழு வார்ம்-அப்போடு தயாரானேன்.

2be9od5g

பல நேரங்களில் நம் மொத்த உணவையும் ஸ்டார்ட்டஸிலேயே முடித்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு இருக்கும். வறுத்த உணவுகளின் மீது நமக்கிருக்கும் பற்றின் வெளிப்பாடுதான் அது. சைவ ஸ்டார்ட்டர்ஸ்களான பக்கோடா, கட்லட், பஜ்ஜி போன்றவை ஒருபக்கம் என்றால், அசைவத்தில் சிக்கன், மட்டன், மீன், இறால் என்ன எல்லாவற்றிலும் மசாலா தடவி பொறித்துக் கொடுத்தால் வயிற்றுக் கோளாறைப் பற்றிக் கவலைப்படாமல் சாப்பிடுவது மறுபக்கம். நானும் ஸ்டார்ட்டஸ்களில் மூழ்கி முத்துக் குளிப்பவன் என்றாலும், மெயின் டிஷ், டெசர்ட் போன்றவற்றிலும் எப்போதும் எனது ஒரு கண் இருக்கும். இந்த பிரக்ஞையின் காரணமாக அனைத்து உணவுகளையும் சுவைத்தும் விடுவேன்.

f7ie9rrg

இப்படி ஸ்டார்ட்டர்ஸ் பற்றி நினைத்து ‘சின் சின்'-ல் அமர்ந்திருந்தபோதுதான், முதலாவதாக வந்தது இறால் கட்லட். மல்லிப்பூ இட்லி என்று சொல்வார்களே, அவ்வளவு மெருதுவாக இருந்தது. சூட்டையும் பொறுட்படுத்தாமல் அறக்கப் பறக்க சாப்பிட்டு முடிக்க, ஃபிஷ் டீப் ஃபைரை வந்தது. பொரியலின் பங்காளி கூட்டு என்பது போல இரண்டும் இரு கண்களென நினைத்துச் சாப்பிட்டேன். அடுத்து வந்தது ஸ்குவிட் என்று சொல்லப்படும் கடமா. முன்னர் இரண்டும் மென்மையானது என்றால், இது ஜவ்வு போல இருந்து தனி டேஸ்ட். 

pfu3enf

இப்படி ஸ்டார்ட்டர்ஸ்களின் தரிசனத்துக்குப் பின்னர் சீன வகையிலான நூடுல்ஸ் மட்டும் சோறு வந்தது. இங்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ‘சின் சின்', சீன உணவுகளுக்கான ரெஸ்டாரன்ட். ஆனால், இந்த கடல் உணவுத் திருவிழா, இந்திய உணவு வகையில்தான் இருந்தது. இது குறித்து டின்னரை ஹோஸ்ட் செய்த செஃப் வெள்ளைசாமி கணேஷிடம் கேட்டோம், “இந்த உணவகம் என்றல்ல, தமிழகத்தில்… ஏன் இந்திய அளவில் செயல்படும் எந்த சீன உணவகமாக இருந்தாலும், அதில் இந்திய உணவுக்கான கூறுகள் சேர்க்கப்படத்தான் வேண்டும்” என்று காரணம் விளக்கினார். 

Listen to the latest songs, only on JioSaavn.com

fq308dko

ஒரு வழியாக மெனுவில் இருந்த பெரும்பான்மை உணவுகளிலும் ஒரு துளி சுவை பார்த்துவிட்டு, ஃப்ரெஷாக ஒரு ஜூஸை, ஒரு கல்ப்பில் குடித்துவிட்டு, ஏப்பம் விட்டபடி நடையைக் கட்டினேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த கடல் உணவுத் திருவிழாக நடத்தப்படுகிறது. அசைவப் பிரியர்கள் மற்றும் கடல் உணவுப் பிரியர்களின் காலண்டரில் கண்டிப்பாக குறித்துவைத்துக் கொள்ளப்பட வேண்டியது ‘சின் சின்'-ன் ‘ஸீ ஃபுட் ஃபெஸ்டிவல்'.

-பரத்ராஜ் ர

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement