இனி சமையலுக்கு ரைஸ் ப்ரான் ஆயில் தான்!

NDTV Food  |  Updated: September 06, 2018 18:24 IST

Reddit
Rice bran cooking oil is the best

தற்போதைய சூழலில் நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் சார்ந்த ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றைச் சொல்லலாம். முன்பெல்லாம் பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் என்றால் மற்ற அனைவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஆனால் எனக்கு சர்க்கரை வியாதி இல்லை என்று சொல்பவர்களை வியப்பாக பார்ப்பது தான் தற்போதைய நிலவரம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நல்ல உறக்கம் இருந்தாலே போதும் நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஆனால், இங்கு உணவிலேயே பல சிக்கல்கள் இருக்கிறதே.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எந்த எண்ணெயில் சமைப்பது என்ற சந்தேகம் இங்கு பலரையும் வாட்டுகிறது. சமையல் எண்ணெயில் தொடங்குகிறது நம் ஆரோக்கியம். ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தற்போது பலரும் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், போன்றவற்றை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ரைஸ் ப்ரான் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவையும் உபயோகப் படுத்தப்படுகிறது.
ஆனால் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் உகந்தது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

சிறந்த எண்ணெய் எது?

நல்லெண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெயின் கலவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்குத் தேவையான கொழுப்பும் கிடைக்கிறது. ரத்தில் உள்ள சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. மேலும் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ரத்த குளுக்கோஸ் அளவுகள், HbA1c, மொத்த கொழுப்பு, ட்ரை கிளிசரைடுகள், எல்.டி.எல் கொலஸ்ட்ரால் போன்றவை டைப் 2 நீரிழிவு மருந்துகளால் குறைக்கப்படுகிறது என்பதை அறியலாம். அதே ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் ரத்த அழுத்தம், மொத்த கொழுப்பு, ட்ரை கிளிசரைடுகள், எல்.டி.எல் கொழுப்பை குறைத்தும் ஹெ.ச்.டி.எல் கொழுப்பை அதிகரித்தும் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

கொழுப்பு தேவை பூர்த்தியாகிறது

இந்த ரைஸ் பிரான் மற்றும் நல்லெண்ணெயில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாய் உள்ளது. இதில் ஒரேசனால், ஃபெரோலிக் அமிலம் மற்றும் சைட்டொஸ்டெரால் போன்றவை இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கும். மேலும் நல்லெண்ணெயில் வைட்டமின் இ அதிகம் இருப்பதால் உடலி ஏற்படும் அலர்ஜியில் இருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நல்லெண்ணெய் மற்றும் ரைஸ் ப்ரான் எண்ணெயின் கலவையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான கொழுப்பு சத்து முழுமையாகக் கிடைக்கும்.

தினமும் உணவில் நெய் சேர்த்து கொள்வதும் நல்லது தான். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்காகவே ஃபார்ச்யூன் விவோ டயபெட்டிஸ் கேர் ஆயில் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 80 சதவிகிதம் ரைஸ் ப்ரான் எண்ணெய் மற்றும் 20 சதவிகிதம் நல்லெண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளதால் இதனை தாராளமாகப் பயன்படுத்தலாம். இந்த ரைஸ் ப்ரான் எண்ணெய் மிகவும் சிக்கனமானதால் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம். தவிர, சாலட் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவு தயாரிப்பில் பயன்படுத்தவும் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது.

உண்மையில் இவையெல்லாம் நோயல்ல. ஒழுங்கற்ற வாழ்வியல் முறையினால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தான். நம் வாழ்வியலை சீராக்கினாலே போதும், எந்த நோயும் நம்மை நெருங்காது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement