உடல் எடை குறைக்க உதவும் ரோஜா டீ

தினம், இரண்டு முறை ரோஜா டீ குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

Sakshita Khosla  |  Updated: July 11, 2018 23:26 IST

Reddit
Rose Tea: 5 Weight Loss Benefits And Easy Ways To Make It At Home!
Highlights
  • அழகு சாதன பொருட்கள் தயாரிக்க ரோஜா பயன்படுகிறது
  • மேலும்,உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது
  • ரோஜா டீயை வீட்டிலேயே தயாரிக்கலாம்

பெரும்பாலான உணவு வகைகளில் ரோஜா பயன்படுத்துவது வழக்கம். உணவுகளில் மட்டுமின்றி, அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், ஆர்கானிக் க்ரீம்ஸ் தயாரிக்கவும் ரோஜா மலர்கள் பயன்படுகின்றன. ரோஸ் வாட்டர், ரோஜா விதை எண்ணெய், ஆகியவையும் இதில் முக்கியமானவை. 

ஆனால், உடல் எடையைக் குறைக்க ரோஜா பயன்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ரோஜா டீ, ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகளுள் ஒன்று.  வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய இந்த ரோஜா டீயை நீங்களும் செய்துப் பாருங்கள் 
eazjjvoda7u 

வீக்கம்
ரோஜாவில் ஆண்டி-ஆக்ஸிடெண்ட்ஸ் அதிகம் உள்ளதால், வீக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றன. உடல் எடைக்கும் வீக்கத்திற்கும் தொடர்பு இருப்பதால், இது எடை குறைய உதவுகிறது

பசி தூண்டல்
டீ, காபி குடிப்பதற்கு பதிலாக, ரோஜா டீ எடுத்து கொள்வதினால், தேவையற்ற பசி தூண்டலை தடுக்கும். இதனால், அடிக்கடி சாப்பிடும் எண்ணம் வராது. 

சீரான செரிமானம்
சீரான உடல் ஜீரணத்திற்கு ரோஜா உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகமாகும் வாய்ப்புகள் குறைவு

டீ டாக்ஸ்
இதிலிருக்கும் டீ டாக்ஸ் காரணிகள் உடலில் உள்ள நச்சு பொருட்களை நீக்க உதவுகின்றன

நோய் எதிர்ப்பு சக்தி 
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, உடலில் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரோஜாவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை காக்கும். 

ஆர்கானிக் ரோஜா டீ செய்யும் முறை5kz1hlfa4keரோஜா டீ செய்வதற்கு பல முறைகள் உள்ளன. உலர்ந்த ரோஜா இதழ்களை கடைகளில் வாங்கி வந்து, தேநீருடன் சேர்த்துக் குடிக்கலாம். ப்ரெக்‌ஷான ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் செய்யலாம். முக்கியமாக இரசாயணம் அல்லாத ரோஜா இதழ்களை பெற வேண்டும். 

முதலில் ரோஜா இதழ்களை கழுவ வேண்டும்
மூன்று கப் தண்ணீர் ஊற்றி, ரோஜா இதழ்களை ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்
பிறகு, தண்ணீரை வடிகட்டி, தேவையான அளவு இனிப்பு சேர்த்து கலக்கவும்
இஞ்சி, இலவங்கம் என விருப்பத்திற்கு ஏற்ப அதில் சேர்த்துக் கொள்ளலாம்

Commentsதினம், இரண்டு முறை இந்த ரோஜா டீயை குடித்து வந்தால், உடல் எடை குறையும். எனினும், உணவு அலர்ஜி கொண்டவர்கள், மருத்துவரை அணுகி, ஆலோசனைப் பெற்று இதனை பின்பற்றவும். About Sakshita KhoslaSakshita loves the finer things in life including food, books and coffee, and is motivated by self-indulgence and her love for words. When not writing, she can be found huddled in the corner of a cosy cafe with a good book, caffeine and her own thoughts for company.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement