உடல் எடையை குறைக்க இதை காலை உணவாக சாப்பிடுங்க

நார்ச்சத்து உடலின் செரிமானத்திறனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

एनडीटीवी फूड  |  Updated: January 22, 2019 11:57 IST

Reddit
Sagarika Ghatge's 'Breakfast Essentials' Are Perfect For Weight Loss!
Highlights
  • சாகரிகா காட்கே ஆரோக்கியமான டயட்டிற்கு மாறியுள்ளார்
  • ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும்.
  • நார்ச்சத்து உடலின் செரிமானத்திறனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

முன்னாள் பாலிவுட் நடிகை சாகரிகா காட்கே ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதை அவருடைய இன்ஸ்டாகிராமின் பக்கங்கள் நமக்கு சொல்லிவிடும். இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஜாஹிர் கானை திருமணம் செய்துள்ளார். சாகரிகா காட்கே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சென்ற சாகசப் பயணங்கள் மற்றும் அங்குள்ள சிறப்பான உணவுகளை போட்டோவாக போடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி  கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவியுடன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதைக் கூட பதிவு செய்திருந்தார். சுற்றுலா சென்ற புடாபஸ்டில் உள்ள இனிப்பு வகைகளை புகைப்படமாக எடுத்து பதிவு செய்திருந்தார். 

தற்போது சாகரிகா காட்கே ஆரோக்கியமான டயட்டிற்கு மாறியுள்ளார். சாகரிகா  ஓட்ஸ் கஞ்சியில் நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழத்துடன்  கூடிய தன் காலை உணவை பதிவிட்டிருந்தார். 

சாகரிகா காட்கே பதிவிட்டுள்ள ஆரோக்கியமான உணவு உடல் எடையைக் குறைக்க உதவும் 

Listen to the latest songs, only on JioSaavn.com

rnh4ndng

ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. 100கிராம் ஓட்ஸில் 11.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. (as per USDA data). நார்ச்சத்து உடலின் செரிமானத்திறனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்ததில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஓட்ஸ் நன்றாக பசியை தீர்ப்பதால் மதிய உணவு வரை பசிக்காது. இதனால் தேவையில்லாத ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட மாட்டீர்கள். புரதச் சத்து அதிகமுள்ள அதே வகையில்  உடல் எடையையும் குறைக்கக் கூடியது. 

ஓட்ஸுடன் பாதாம் பருப்பு மற்றும் பழங்களை சாப்பிடுவதால் அது ஒரு சுவையான உணவாக மாறிவிடுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்வுகிறவர்கள் சாகரிகா காட்கேயின் காலை உணவு முறையை பின்பற்றலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement