சோடியம் சேர்க்காமல் உணவை ருசியாக்கலாம்!!

இதில் சோடியம் குறைவாகவும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மற்ற தாதுக்கள் அதிகம் இருக்கிறது.  பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 15, 2019 13:15 IST

Reddit
Scientists Develop Way To Make Food Taste Salty, Without Excessive Sodium

உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.  மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.  நாம் உணவில் சேர்க்கும் உப்பில் சோடியம் அதிகம் இருப்பதாலேயே இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.  இதன் காரணமாகவே சில ஆரோக்கிய நிபுணர்கள் உப்பு குறைவான உணவை சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறார்கள்.  குறிப்பாக, இரவு நேர உணவில் உப்பை மிகவும் குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.  அப்படியானால் உடல் எடை குறைப்பிற்கும், இரத்த அழுத்தம் குறைவதற்கும் உப்பு குறைவான அல்லது உப்பே இல்லாத உணவை சாப்பிட வேண்டுமா என்று கவலைப்படுகிறீர்களா?? கவலையே வேண்டாம்.  சோடியம் சேர்க்காமல் உணவில் எப்படி ருசியாக செய்யலாம் என்று ஆரோய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

Journal of Food Science என்ற புத்தகத்தில் வெளியான தகவலின்படி, Nacl மற்றும் மற்ற பொருட்கள் சேர்த்து புதிதாக தயாரித்துள்ளனர்.  வழக்கமாக நாம் சேர்த்து கொள்ளும் உப்பின் சுவைப்போல் இருக்காது என்பதால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்.  சுவை குறைவாக இருந்தாலும் அதில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருக்கிறது.  மேலும் இதில் சோடியம் குறைவாகவும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மற்ற தாதுக்கள் அதிகம் இருக்கிறது.  பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

மேலும் இந்த ஆய்வில் அவர்கள் தெரிவித்ததாவது, பொட்டாசியம் க்ளோரைடு கசப்பு சுவையாக இருக்கும் என்பதால் யாரும் அதனை விரும்பி உணவில் சேர்க்க மாட்டார்கள்.  கால்சியம் க்ளோரைடு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை தீர்மானிக்க ஒரு சோதனை நடத்தப்பட்டது.  இதில் சோடியம் க்ளோரைடு 96.4 சதவிகிதம், 1.6 சதவிகிதம் பொட்டாசியம் க்ளோரைடு மற்றும் 2 சதவிகிதம் கால்சியம் க்ளோரைடு ஆகியவை தான் இதற்கான சரியான அளவாக கணிக்கப்பட்டது.  நாம் பயன்படுத்தும் உப்பிற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.  மேலும் 78 சதவிகிதம் சோடியம் க்ளோரைடு மற்றும் 22 சதவிகிதம் கால்சியம் க்ளோரைடு என இந்த கலவையிலும் தயாரிக்கலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com