கோவையில் நடைபெறும் விதைகளுக்கான திருவிழா

2018 ஆம் ஆண்டு ஜூலை 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஏழு மணிவரை கோவை விதை திருவிழா KSIRS பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

  |  Updated: July 12, 2018 20:24 IST

Reddit
Seed festival to be held in Coimbatore
2018 ஆம் ஆண்டு ஜூலை 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஏழு மணிவரை கோவை விதை திருவிழா KSIRS பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

சொந்த விதைகளை பாதுகாக்கும் அமைப்புகள் மற்றும் விவசாயிகளுடன் இனைந்து தன்னார்வலர்கள் சிலர் இந்த விதை திருவிழாவை கோவையில் நடத்துகின்றனர். கோவையில் முதல் முறையாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 700  லிருந்து 800 விதைகள் இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இங்கு மரபு விதைகளின் சந்தையுடன், இயற்கை விளைப்பொருட்கள், இயற்கையாக நிறமுட்டப்பட்ட பருத்தி ஆடைகள், இயற்கை வாழ்வியல் தொடர்பான புத்தகங்கள், கைவிணைப் பொருட்கள், மரபு வழி வந்த விசாயா, வாழ்வியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகள் விளையாடுவதற்கேன மரபு விளையாட்டுகளுடன், நாவூறவைக்கும் இயற்கை உணவுகளும் இங்கே இடம்பெற்றிருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இயற்கை முறை விவசாயத்தின் விழிப்புணர்வைக் கொண்டுவருவதே இந்த விழாவின் நோக்கம் என்கிறார் இந்நிகழ்ச்சியை நடத்தும் தன்னார்வலர்களில் ஒருவரான ராஜ ஷங்கர்.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்திலும் ஆர்கானிக் பொருட்களையே பயன்படுத்த விரும்புமும் பலருக்கு இந்த கோவை விதை திருவிழா சிறந்த வேட்டையாகயிருக்கும். மேலும் இந்த விழாவிற்கான அனுமதி இலவசம்.

Comments 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Seed

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement