ரவையில் இத்தனை ஊட்டச்சத்துக்களா? உப்மாவிற்கு 'நோ' சொல்லாதீர்கள்

பால், காய்கறிகளுடன் சேர்த்து ரவை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

   |  Updated: August 06, 2018 16:05 IST

Reddit
Semolina Or Suji For Weight Loss: How To Consume This Food Grain To Shed Kilos Faster
Highlights
  • ரவை சாப்பிடுவதனால், இரும்புச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம்
  • மெக்னீசியம், சிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ரவையில் இடம் பெற்றுள்ளன
  • ரவையில் ஜீரோ அளவு கொழுப்பு உள்ளது

இந்தியாவில், ரவை உணவு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் வகையாக ரவை உணவுகள் சமைக்கப்படுகின்றன. கேசரி, அல்வா, உப்மா, தோசை என பல வகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. எளிதாக செரிமானம் ஆக கூடிய இருப்பதால், அனைத்து வயதினரும் சாப்பிடும் வகையில் உள்ளது. ரவையில், ஆரோக்கியமான உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நம் உணவு வழக்கங்களை ரவை உணவுகளை தவிர்க்க கூடாது. பால், காய்கறிகளுடன் சேர்த்து ரவை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

1. உடல் ஆற்றல்: ரவையில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்ஸ், உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும் குணநலன் கொண்டது.

Newsbeep
semolina 625

2. இரும்புச்சத்து: இரும்புச்சத்து அதிகமுள்ள ரவை எடுத்துக்கொள்வதினால், இரும்புச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம். உடலில் உள்ள இரும்புச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

3. எலும்பு சக்தி: உடல் எலும்புகள் வலிமையடைய கால்சியம் சத்து தேவையானது. 100 கிராம் ரவையில், 17 மில்லி கிராம் கால்சியம் உள்ளதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எலும்பு சக்தி அதிகரிக்க ரவை சாப்பிடலாம்.

4. சீரான நரம்பு செயற்திறன்: மெக்னீசியம், சிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ரவையில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடல் நரம்புகளின் செயலை சீராக வைக்க உதவுகின்றன.

5. கொழுப்பு அற்றது: ரவையில் ஜீரோ அளவு கொழுப்பு உள்ளது என்று அமெரிக்க வேளான்மை துறை ஆய்வில் வெளியிட்டுள்ளது. எனவே, ரவை உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com

vnfc65bg

உடல் எடையை குறைக்க உதவும் ரவை

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சீரான பயிற்சிகளும், உணவு கட்டுப்பாடும் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். 100 கிராம் ரவையில், 360 கலோரிகள், ஜூரோ கொழுப்பு உள்ளன. எனவே, உடல் எடை குறைக்கும் உணவு பட்டியலில் ரவை சேர்த்து கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா தெரிவித்துள்ளார். மேலும், ரவையுடன், புரதச்சத்து நிறைந்த பால், காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. இனிமேல், உப்மாவிற்கு நோ சொல்லாதீர்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement