ஷெரட்டனின் பெலிக்கன் டெக் சென்று வாருங்கள்!

NDTV Food  |  Updated: November 03, 2018 16:35 IST

Reddit
Sheraton Grand Resort & Spa launches Pelican Deck

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஷெரட்டன் கிராண்ட் எனப்படும் சொகுசு ரிசார்ட் புதிதாக பெலிக்கன் டெக் என்னும் ஓப்பன் ஏர் ரெஸ்டாரண்ட்டை துவங்கியுள்ளது. ஐரோப்பிய க்ரில் மற்றும் பார்பிக்யூ உணவுகளை சுவைக்க நீங்கள் இங்கு செல்லலாம். கடற்கரையின் அழகை ரசித்தப்படியே சூடான சுவையான உணவை ருசித்து மகிழலாம். இந்த ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு ஃபார்ட் நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் பிரில்மேலர் மற்றும் பிஎன்பி நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரீவ் க்ரிக்டன் வருகின்றனர்.

ஷெரட்டான் க்ராண்ட் ஸ்பா இருப்பதால் உடல் மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட்டின் சுற்றுப்புறம் மற்றும் வடிவமைக்கப்பட்ட முறை எல்லாமே உங்கள் மனதை கவரும் வகையில் இருக்கிறது. The Reef என்ற பெயரில் மல்டிகுசைன் ரெஸ்டாரண்டும், The Pintail Lounge என்ற பெயரில் பார் வைத்திருக்கின்றனர். வார இறுதி நாட்களில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ இங்கு வந்து நேரத்தை செலவழிக்கலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement