தக்காளியை ஃபிரிஜில் வைக்கலாமா? என்ன சொல்கிறார்கள் வல்லுநர்கள்!

எனவே பழுத்த தக்காளியின் சுவைகளில் இரண்டு வகையான சேமிப்பு விருப்பங்களின் (குளிர்சாதனப் பெட்டி மற்றும் அறை வெப்பநிலை) வேறுபாட்டை அவர்கள் ஆராய்ந்தனர்.

NDTV Food  |  Updated: May 30, 2020 11:11 IST

Reddit
Should Tomatoes Be Stored In The Fridge? Here's What Experts Say

நம் எல்லோருடைய சமையலறையிலும் நீங்கள் காணக்கூடிய பொதுவான உணவுப் பொருட்களில் தக்காளி ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. நாம் சமைக்கும் ஒவ்வொரு செய்முறையிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால், நீங்கள் அதைச் சரியாகச் சேமிக்கிறீர்களா? தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டுமா அல்லது சமையலறை கவுண்டரில் வைக்கலாமா என்பது குறித்துத் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு பதிலைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தவரை, “நுகர்வோர் புதிய பழங்களின் (தக்காளி) சுவையைப் பற்றி அதிகளவில் புகார் அளித்து வருகின்றனர்.” எனவே பழுத்த தக்காளியின் சுவைகளில் இரண்டு வகையான சேமிப்பு விருப்பங்களின் (குளிர்சாதனப் பெட்டி மற்றும் அறை வெப்பநிலை) வேறுபாட்டை அவர்கள் ஆராய்ந்தனர். இந்த ஆய்வு ஃபிரான்டியர்ஸ் இன் தாவர அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இரு சேமிப்பு விருப்பங்களிலும் தக்காளியின் சுவையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை; மாறாக இது தக்காளியின் வகையாகும், இது சுவைக்கு வரும்போது முக்கியமானது. தக்காளியின் தெளிவான இனிப்பு, அமிலத்தன்மை மற்றும் பழச்சாறு ஆகியவற்றை ஆராய்ந்த ஒரு 'சென்சார் பேனலின்' நிபுணத்துவத்தை அவர்கள் கண்டறிந்தனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com

பழுத்த தக்காளி, அவை எடுக்கப்பட்ட பிறகு, அறுவடைக்கு பிந்தைய வணிக ரீதியான செயல்முறைக்கு உட்படுகின்றன என்று ஆய்வு கூறியது; பின்னர் அவை குளிர்சாதனப் பெட்டி அல்லது அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும். எனவே, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தக்காளியை அதன் சுவைகளை முழுமையாக அனுபவிக்கக் குறைந்த காலத்திற்குச் சேமிக்க வேண்டும்.

இப்போதிலிருந்து, ​​நீங்கள் அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், எதிர்கால பயன்பாட்டிற்காகச் சேமிக்கத் தக்காளியை மொத்தமாக வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உணவில் நீங்கள் விரும்பும் சுவைகளை அகற்றக்கூடும். ஆரோக்கியமாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement