பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?

பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 03, 2019 15:22 IST

Reddit
Should You Drink Water After Eating Papaya? Here's the Answer

வெயில் காலம் வந்துவிட்டதால் நம் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.  அதனை ஈடுகட்ட நாம் வெயில் காலத்திற்கு உகந்த நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது அவசியம்.  ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றவாறு காய்கறிகள் மற்றும் பழங்களில் விளைச்சல் மாறுபடும்.  கோடைக்காலத்தில் தர்பூசணி, பப்பாளி, வெள்ளரி, முலாம்பழம் போன்ற பழங்கள் அதிகபடியாக நமக்கு கிடைக்கும்.  இந்த பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் பப்பாளி.  பப்பாளியில் ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.  மேலும் இதில் வைட்டமின் சி, ஆண்டிபேக்டீரியல் தன்மை இருப்பதால் சரும பராமரிப்பிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

papaya
 

பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்து கொள்கிறது.  பப்பாளி இலை சாறு டெங்கு நோயை தடுக்க பயன்படுகிறது.  வெயில் காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லதுதான்.  ஆனால், பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  ஆம். பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் என்ன பிரச்னை என்பதை பார்ப்போம். 

பப்பாளியில் பப்பைன் மற்றும் கைமோன்பப்பைன் என்னும் பொருட்கள் உள்ளதால் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது.  மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது குடலை சுத்தம் செய்கிறது.  வயிற்றில் அல்சர் ஏற்படாமல் தடுக்கிறது.  நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் சிறந்த மலமிழக்கியாக செயல்படுகிறது.  பப்பாளியை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றுபோக்கு ஏற்படும்.  பப்பாளி, தர்பூசணி மற்றும் வெள்ளரியில் ஏற்கனவே அதிகபடியாக நீர்ச்சத்து இருப்பதால், இதனை சாப்பிட்ட பின் மீண்டும் தண்ணீர் குடிக்கும்போது வயிற்றில் உள்ள PH அளவு சீராக இருக்காது.  பப்பாளி மட்டுமில்லாமல் எந்த பழங்களை சாப்பிட்டாலும் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். 

உணவுமுறையை சரிசெய்து உடலை பாதுகாத்திடுங்கள். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  PapayaSummer

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement