Street Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க!

சாலையோர உணவுகள் என்று சொல்லப்படும், Street food-களை, வயிற்றைக் கெடுக்காமல், அதே நேரத்தில் ருசியிலும் வஞ்சம் வைக்காமல் வகை வகையாக அடுக்கினால்…

एनडीटीवी  |  Updated: November 13, 2019 15:11 IST

Reddit
Sigree Global Grill Street Food Review

...மூங் தால் அல்வா, இளநீர் பாயாசம், ஜிலேபி, ஐஸ் கேக்ஸ் என நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது.

புதுயுக நகர வாசிகள் வெளியில் சென்று சாப்பிடுவதை இரண்டு வகையாக பிரிக்க முடியும். முதலாவது… குளித்து, பார்ஷான உடை அணிந்து, இருப்பதிலேயே பளபளக்கும் காலணிகளுடன் பந்தாவாக சென்று, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து உண்பது. இரண்டாவது, புதிதாக தெரு ஓரங்களில் திறக்கப்பட்ட கடைகளிலோ, வெறித்தனமாக ருசி கொண்ட ரோட்டுக் கடைகளிலோ சாப்பிடுவது. முதலாவது வகையில் பல ப்ளஸ்கள் இருந்தாலும், இரண்டாவது வகையில் உள்ள உடலின் கடைசி நாடி, நரம்பைத் துள்ளி குதிக்கச் செய்யும் ஸ்ருதி இருக்காது. 

ஆனால், சாலையோர உணவுகள் என்று சொல்லப்படும், Street food-களை, வயிற்றைக் கெடுக்காமல், அதே நேரத்தில் ருசியிலும் வஞ்சம் வைக்காமல் வகை வகையாக அடுக்கினால்… அப்படித்தான் அடுக்கினார்கள் Sigree Global Grill-ன் Street Food திருவிழாவில்…

3nobko7o

வட இந்திய, குறிப்பாக டெல்லியின் இதயமாக உள்ள தஹி பூரி, பானி பூரி, சமோசா சாட், பெல் பூரி, தஹி வடா, தந்தூரி முர்க், மட்டன் கிலாஃபி சீக் உள்ளிட்ட உணவுகள் ஏசி அறையிலும் நம் உடலை 12 மணி உச்சி வெயிலில் இருக்க வைக்கும் அளவுக்கு சூடேற்றும். கொலைப் பசியுடன் இதை டாப் டூ பாட்டம் தெறிக்கவிட்ட பின்னர், ஸ்டார்ட்டர்ஸ்…

ap63r8b8

பஃபே உணவு என்பதால், வகை தொகை இல்லாமல் ஸ்டார்ட்டர்ஸ் வகை வறுத்த உணவுகள் திரும்ப திரும்ப கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. மீன், இறால், சிக்கன், மட்டன் என தந்தூரி வகையில் சமைக்கப்பட்ட ஸ்டார்ட்டர்ஸ் ஒரு பக்கம் என்றால், மஷ்ரூம், உருளை, பனீர் போன்ற வெஜ் ஸ்டார்ட்டர்ஸ் மறுபக்கம். மூக்கில் நீர் வழிய வழிய அனைத்திலும் இரண்டு, மூன்று ரவுண்டுகள் போன பின்னர்…

Listen to the latest songs, only on JioSaavn.com

huv5no98

மூங் தால் அல்வா, இளநீர் பாயாசம், ஜிலேபி, ஐஸ் கேக்ஸ் என நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதைச் சாப்பிடவே உங்களுக்கு வயிறு இருக்காது என்றால், உங்கள் நிலைமை கொஞ்சம் மோசம்தான். இதையும் தாண்டி, மட்டன் தம் பிரியாணி, நாண் மற்றும் சப்பாத்தி (பனீர் பட்டர் மசாலா, இறால் மசாலா, நெய் வெஜ் மசாலா உள்ளிட்டவை சைடு டிஸ்கள்), புலாவ் வகைகளில் வித வித சோறு என அடுக்கிக் கொண்டே போகலாம். இதிலும் ஒரு ரவுண்டு சென்ற பின்னர், மீண்டும் டெசர்ட் வகையில் முங்கி எழுந்தால், முத்துக் குளித்த அனுபவத்தைப் பெறலாம். இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இந்த உணவுத் திருவிழா நடக்கும் என்பதால், மிஸ் செய்யாமல் போய் சாப்பிட்டுப் பாருங்க…

-பரத்ராஜ் ர

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்கள்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement