சர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா.!! யார் சொன்னது? இதை படிங்க...

சீத்தாபழம் (Custard Apple) தற்போதைய சீசன் பழமாகும். இது ஒரு சுவையான பழமாக மட்டுமல்லாமல், நம் தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு நல்லது. இந்த பழத்தைப் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளைப் பற்றியும் அவற்றை ஏன் நம்பக்கூடாது என்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

  | Translated by: Ragavan Paramasivam  |  Updated: November 07, 2019 12:05 IST

Reddit
Sitaphal Myths And Facts: Here's Why You Must Have Custard Apple This Season

சீத்தாப்பழம் செரிமானத்திற்கு உதவும். வீக்கம் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கும்.

Highlights
  • சீத்தாப்பழம் கண் ஆரோக்கியத்தையும் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்
  • சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளும் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம்
  • சீத்தாப்பழம் புண்களைக் குணப்படுத்துகிறது.

சீத்தாபழம் அல்லது Custard Apple என்பது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது சீத்தாபழ சீசன் பருவம் என்பதால், உங்கள் உணவின் ஒரு பகுதியாக இதை சேர்த்துக்கொள்வது நல்லது. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் உங்கள் உணவில் சீத்தாபழம் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார். அவர், தனது சமீபத்திய போஸ்ட் ஒன்றில், சீத்தாபழம் பற்றிய சில கட்டுக்கதைகளைப் பற்றியும், உண்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பருவகால மற்றும் ஆரோக்கியமான இந்த  உள்ளூர்பழத்தைப் பற்றி ருஜுதா என்ன கூறுகிறார் என்பதை இங்கு அறிந்துகொள்ளுங்கள்.

சீத்தாபழம் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

1. நீரிழிவு நோயாளிகள் சீத்தாபழத்தை தவிர்க்க வேண்டும்..!

சீத்தாபழம் 54-இன் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான பழமாகும். அதுமட்டுமல்லாமல், GI 55 மற்றும் அதற்குக் குறைவான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் ருஜுதா கூறுகிறார்.

qj1slegg

நீரிழிவு நோயாளிகளுக்கு சீத்தாப்பழம் மிக நல்லது.
Photo Credit: iStock

Also read: Got Acidity? Try Sitaphal - Health Benefits Of This Superfruit Other Than Weight Loss

2. இதய நோயாளிகள் சீதாபலைத் தவிர்க்க வேண்டும்..?

உண்மை என்னவென்றால், சீத்தாபழம் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற நன்மை பயக்கும் தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்புக்கு, இந்த பழம் உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் நல்லது.

3. சீதாபல் செரிமானத்திற்கு நல்லது..!

இங்குள்ள கட்டுக்கதை என்னவென்றால், அதிக எடை கொண்டவர்கள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், சீதாபல் செரிமானத்திற்கு நல்லது மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் என்று ருஜுதா தெரிவிக்கிறார். இத்னால் அமிலத்தன்மையைத் (Acidity) தடுக்கவும், புண்களைக் குணப்படுத்தவும் முடியும். சீத்தாபழம் வைட்டமின் பி complex-ன் நல்ல மூலமாகும், குறிப்பாக வைட்டமின் பி 6.

Also read: This Is the Best Time To Eat Fruits For Better Digestion And Weight Loss

4.PCOD உள்ள பெண்கள்  சீத்தாபழத்தை தவிர்க்க வேண்டும்..?

இது சீத்தாபழத்தைப் பற்றிய மற்றொரு பிரபலமான கட்டுக்கதை ஆகும். ஆனால், சீத்தாபழம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலம் என்பதால், அதற்காகவே, பி.சி.ஓ.டி உள்ள பெண்களுக்கு சீத்தாபழத்தை சாப்பிடலாம் என்று ருஜுதா கூறுகிறார். இது கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வைக் குறைக்கும், எரிச்சலைக் குறைக்கும் தன்மை கொண்டது.

எனவே, அனைத்து வயதினரும் சீத்தாப்பழத்தை பயமும், குற்ற உணர்ச்சி இல்லாமலும் சப்பிடலாம். சீத்தாப்பழம் உங்கள் சருமத்தின் நிறம் (tone), முடியின் தரம், கண்பார்வை, மூளையின் ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். இது anti-obesogenic, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் காட்டும் உயர் பயோஆக்டிவ் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. அதை உங்கள் கைகளால் சாப்பிடுங்கள், உங்கள் விரல்களை நக்கி அனுபவித்து சாப்பிடவும் என்கிறார் ருஜுதா!

qsj2n7fo

உங்கள் உணவில் சீத்தாப்பழத்தை சேர்த்துக்கொண்டால் கண்பார்வைக்கு நல்லது.
Photo Credit: iStock

Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: Polycystic Ovary Syndrome (PCOS): 9 Early Signs And Symptoms You Must Not Ignore; Top Tips For Prevention

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement