சரும பராமரிப்பில் அசத்தும் முருங்கை!

   |  Updated: July 04, 2018 16:50 IST

Reddit
Skin Care: 6 Reasons To Add Drumstick Or Moringa To Your Beauty Regime
Highlights
  • முருங்கையில் மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன
  • முருங்கையில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்துக்கு நல்லது
  • முருங்கை ஃபேஸ் பேக் முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பதார்த்தங்களில் முக்கியப் பங்கு வகிப்பது `முருங்கை காய்’. இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் சூப், குழம்பு உள்ளிட்ட உணவு வகைகளில் முருங்கை காய் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகச் சாம்பார், காரக்குழம்பு உள்ளிட்ட பெரும்பாலான தென் இந்திய உணவு வகைகளில் முருங்கை காய் சேர்க்கப்படுகிறது. முருங்கை மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ குணங்கள் கொண்டது. முருங்கை இலை, பூ, விதை, காய் என அனைத்திலுமே ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுகள் கொட்டிக்கிடக்கின்றன. முருங்கையின் மருத்துவ குணங்களும், சுவைக்கூட்டும் தன்மையும் அனைவரும் அறிந்ததே. ஆனால் முருங்கையில் சருமத்துக்கு அழகூட்டும் மூலப்பொருள் ஒளிந்திருப்பது தெரியுமா? உலகம் முழுவதும் முருங்கை `ஃபேஸ் மாஸ்க்’ பிரபலமாகி வருகிறது. அழகை மேம்படுத்தும் பணியை முருங்கைச் சிறப்பாக செய்வதை மக்கள் கண்கூடாக பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

Newsbeep
உங்கள் சரும பராமரிப்பில் முருங்கை இலையையும் முருங்கை எண்ணெய்யையும் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ..

1. இளைமை தோற்றத்தை தரும்!

முருங்கை எண்ணெய்யும் முருங்கை இலை பொடியும் முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் மறையும். சருமத்தை இறுக்கமடையச் செய்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

2. உதடுகளை மிருதுவாக்கும்!

உதடு பராமரிப்பு பொருட்களில் முருங்கை எண்ணெய்யை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். முருங்கை எண்ணெய் உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 

moringa or drumstick beauty benefits


3. நிறத்தைக் கூட்டும்!

முருங்கை இலைகளை அரைத்து முகத்தில் பூசி வர, சருமத்தின் நிறம் கூடும்.

4. முகப்பருவைப் போக்கும்!

முருங்கையில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் தன்மை, முகப்பரு வராமல் தடுக்கும். முருங்கை இலை சாற்றை முகப்பரு மீது தடவி வர, பருக்கள் காணாமல் போகும்.

5. உடலின் நச்சுக்களை வெளியேற்றும்!

Listen to the latest songs, only on JioSaavn.com

முகப்பருக்கள் வர ரத்தத்தில் சேரும் நச்சுக்களும் ஒரு காரணம். முருங்கைப் பொடி அல்லது முருங்கை விதைகளை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் வெளியேறும்.

6. சரும துளைகள் மறையும்!

Commentsமுருங்கையில் சரும ஆரோக்கியம் தரும் கொலாஜன் புரதம் இருப்பதால் முகத்தில் இருக்கும் துளைகளை மறையச் செய்யும்.

அற்புதம் செய்யும் முருங்கை ஃபேஸ் மாஸ்க்!

முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ரோஸ் வாட்டர், அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து காலை வேளையில் முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும். பின்னர் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துக் கொண்டு சிறிதளவு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர முகத்தில் பொலிவு கூடும்!

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement