தோல் பராமரிப்பு உணவு: பளபளன்னு மின்னும், ஊட்டமான சருமம் வேணுமா..? இந்த கற்றாழை ஜூஸை குடிங்க..!

பல சந்தர்ப்பங்களில், நம் உணவில் சருமத்தை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்க வைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.

   | Translated by: Ragavan Paramasivam  |  Updated: February 27, 2020 14:20 IST

Reddit
Skin-Care Diet: Drink This Aloe-Vera Juice For Glowing And Nourished Skin 
Highlights
  • கற்றாழை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.
  • இது வைட்டமின் ஈ மற்றும் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
  • கற்றாழை சாறு வீட்டில் தயாரிக்க மிகவும் எளிதானது.

உங்கள் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழந்ததற்கு, மாசு, நீங்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் அல்லது வேலையில் உள்ள மன அழுத்தம் போன்றவற்றைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு இப்போதும் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், அது இன்னும் ஆரோகியத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். தினசரி அடிப்படையில் வெளிப்படும் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அடிக்கடி நமது சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் இன்னும் ஆழமாக தோண்டி உங்கள் உணவை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். பல சந்தர்ப்பங்களில், நம் உணவில் சருமத்தை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்க வைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதில்லை.

நீங்கள் இயற்கை சிகிச்சையைத் தேடுகிறீர்களானால், நீங்கள் கற்றாழையை முயற்சி செய்யலாம். இந்தியில் கிருத்குமாரி என்றும் அழைக்கப்படும் கற்றாழை என்பது ஒரு அழகுபடுத்தும் தாவரமாகும், இது முழு அழகுத்துறையின்கற்பனையையும்கவர்ந்துள்ளது. இது உங்கள் கிரீம்கள், ஃபேஸ் வாஷ், சோப்புகள் என எல்லவற்றிலும் உள்ளது!

(Also Read: )

சருமத்திற்கு கற்றாழை தரும்நன்மைகள்:

கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. ஆக்ஸிஜனேற்றங்கள் மந்தமான தோல் மற்றும் சுருக்கங்களுக்கு காரணமான free radical activity-ஐ தடுக்க உதவுகின்றன. டி.கே. பப்ளிஷிங் ஹவுஸின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தின்படி, கற்றாழை "பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, ஈ மற்றும் பல பி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின்" ஒரு நல்ல மூலமாகும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இரண்டும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், கதிரியக்கமாகவும் வைத்திருக்க மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்தில், முகப்பரு அல்லது தீக்காயங்களை குணப்படுத்த கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.

(Also Read: )

eq4ccjk
கற்றாழை நன்மைகள்: கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.

அழகானசருமத்திற்காககற்றாழைசாறுசெய்வதுஎப்படி..!

கற்றாழை (Aloe Vera) ஜெல்லை மட்டும் எடுக்கலாம் அல்லது தோலுடனும் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி இருந்தால், உங்கள் சமையலறையிலும் பயன்படுத்தலாம். கற்றாழை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அதை ஜூஸ் செய்வது. நீங்கள் முயற்சிக்க ஒரு எளிய செய்முறை இங்கே.

Listen to the latest songs, only on JioSaavn.com

(Also Read: )

ஒரு நடுத்தர அளவிலான கற்றாழை இலையை பறித்து விடுங்கள். அதை துண்டு துண்டாக வெட்டுங்கள். மேல் தோலை உரித்து, ஒரு பாத்திரத்தில் தெளிவான ஜெல்லை வெளியேற்றவும். இப்போது மிக்ஸியில் அந்த ஜெல்லுடன், சில ஆப்பிள் அல்லது அன்னாசி பழச்சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை ஃப்ரெஷாக உடேனே உட்கொள்ளுங்கள்.
சிறந்த முடிவுகளுக்கு இந்த ஜூஸை தவறாமல் தொடர்ந்து குடிக்கவும்.

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement