குறைவான தூக்கம் மெட்டபாலிசத்தை பாதிக்குமா?

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய கொழுப்புகள் சரியாக செரிக்கப்படாமல் இருக்கும்போது உடல் பருமன் அதிகரிக்கும். 

Edited by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: September 17, 2019 15:05 IST

Reddit
Sleep Deprivation May Affect Fat Metabolism: Study 

தினமும் இரவு நீண்ட நேரம் கண் முழித்து வேலை செய்து வருவதாலும், உடலுக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலும் உடலில் மெட்டபாலிச பாதிப்பு ஏற்படும்.  நம் தூக்கத்தின் தரத்தை பொருத்து தான் உடல் ஆரோக்கியம் அமையும்.  தூக்கம் தடைப்படும்போது தானாகவே உடல் உறுப்புகள் பாதித்து, உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.  தூக்கம் குறையும்போது, செரிமான பிரச்னைகள் ஏற்படும். இதனால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.  தூக்கம் குறையும்போது, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய கொழுப்புகள் சரியாக செரிக்கப்படாமல் இருக்கும்போது உடல் பருமன் அதிகரிக்கும்.  மேலும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கக்கூடிய மெட்டபாலிசத்தையும் சீராக செயல்பட வைக்க தூக்கம் மிகவும் முக்கியமானது.20 வயதில் இருக்கக்கூடிய 15 நபர்களை கொண்டு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.  இவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் ஐந்து மணி நேர தூக்கத்தை மட்டுமே பெற்றிருந்தனர்.  மேலும் அவர்களுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டது.  உணவு சரியாக செரிக்கப்படாமல், உடலில் கலோரிகள் அதிகரித்து, உடல் பருமன் அடைந்திருக்கிறது. எனவே, நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தை பெறும்போது, உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் உடல் பருமனாகமும் இருக்கும். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com