3 பொருட்கள் கொண்டு எலுமிச்சை ஐஸ்கிரீம் செய்யலாம்! ஈஸி ரெசிபி

இந்த செய்முறைக்கு உங்களுக்குத் தேவையானது - எலுமிச்சை, கிரீம் மற்றும் சர்க்கரை. எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? வெண்ணெய் மென்மையான எலுமிச்சை ஐஸ்கிரீம் நீங்களே செய்து மகிழுங்கள்!

NDTV Food  |  Updated: May 28, 2020 19:05 IST

Reddit
Slurp Alert! This 3-Ingredient Lemon Ice-Cream Is All You Need To Beat The Quarantine Blues
Highlights
  • இந்த செய்முறைக்கு உங்களுக்கு தேவையானது - எலுமிச்சை, கிரீம், சர்க்கரை
  • ஒரு ஐஸ்கிரீம் ஒருபோதும் நம் மனநிலையை அதிகரிக்கத் தவறாது
  • எலுமிச்சை ஐஸ்கிரீம் ஒரு கிண்ணமாக நீங்களே செய்து மகிழுங்கள்

நம் எல்லோருக்கும் ஐஸ்கிரீம் என்றால் விருப்பமானதாக இருக்கும். எந்த காலமாக இருந்தாலும், ஐஸ்கிரீம் நம்முடைய மனநிலையை மாற்றும் வல்லமை பெற்றது. இந்த லாக்டவுன் கட்டத்தில் நாம் அதை எவ்வாறு புறக்கணிக்க முடியும்? எனவே, உங்கள் நாளை பிரகாசமாக்க உதவும் எளிய எலுமிச்சை ஐஸ்கிரீம் செய்முறையை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம். இந்த செய்முறைக்கு உங்களுக்குத் தேவையானது - எலுமிச்சை, கிரீம் மற்றும் சர்க்கரை. எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? வெண்ணெய் மென்மையான எலுமிச்சை ஐஸ்கிரீம் நீங்களே செய்து மகிழுங்கள்!

icecream 5 625

தேவையான பொருட்கள்:

ஃபிரஷ் கிரீம்- 500 மில்லி

எலுமிச்சை சாறு- 2-3 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை ஜெஸ்ட் - 1-2 டீஸ்பூன்

சர்க்கரை- 1-2 கப் (தூள்)

செய்முறை:

1. எலுமிச்சை மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

2. ஃபிரஷ் கிரீமை ஒரு குளிர்ந்த பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பாத்திரம் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஃபிரிஜில் இருக்க வேண்டும்.

3. அந்த கிரீமை நன்கு கலக்கவும். அதில் நுரை வரும் வரை கலக்க வேண்டும்.

4. எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவையைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். அதில் எலுமிச்சை ஜெஸ்ட்டையும் சேர்க்கவும். இந்த சமயத்தில் உங்களுக்குத் தேவையான அளவு எலுமிச்சை சாறு அல்லது சர்க்கரை தூளைச் சேர்க்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

5. அதன் பதம் உங்களின் விருப்பமான பதம் வந்த பிறகு, அதை ஐஸ்கிரீம் மோல்ட்டில் ஊற்றி ஃபிரிஜில் வைக்கவும்.

6. 8 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும் (அல்லது இரவு முழுவதும்).

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement