கணவருக்காக ஆரோக்கிய உணவு சமைத்த சோனம் கபூர்... நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

சோனம் கபூர் வறுத்த டோஃபு டிஷ் தயாரித்து, சமையல் செயல்முறையின் வீடியோவையும், இறுதியாகத் தயாரிக்கப்பட்ட உணவின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துள்ளார்.

NDTV Food  |  Updated: March 28, 2020 11:23 IST

Reddit
Sonam Kapoor Cooked A Healthy Quarantine Meal For Husband Anand Ahuja; See What She Made

சோனம் கபூர் வீட்டில் புரதம் நிறைந்த வறுத்த டோஃபு சமைத்தார்.

Highlights
 • பல பிரபலங்கள் லாக்டவுனின் போது சமைக்க முயற்சி செய்கிறார்கள்
 • ஆனந்தம் அஹுஜாவுக்கு சோனம் கபூர் ஆரோக்கியமான உணவை சமைத்தார்
 • சோனம் வீட்டில் வறுத்த டோஃபுவை தயாரித்தார், இது சத்தானதாக இருந்தது

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த லாக்டவுன் காலத்தில் நாடு முழுவதும் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் எவ்வாறு தங்கியுள்ளார்கள் என்பது பாராட்டத்தக்கது. நிறைய நேரம் கையில் இருப்பதால், மக்கள் தங்களை பிஸியாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார்கள். பாலிவுட் நடிகர்கள் பிஸியாக வேலை செய்து, தங்களை வீட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர். கத்ரீனா கெய்ஃப் வொர்க் அவுட் செய்தால், வருண் தவான் மற்றும் மற்ற நட்சத்திரங்கள் சமையல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சமையலில் ஈடுபட்டுள்ள மற்றொரு பிரபலம் யார் என்றால், அது சோனம் கபூர். சில நாட்களுக்கு முன்பு, சோனம் கபூர் டெல்லியில் கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு ஆரோக்கியமான வீட்டில் சமைத்த உணவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த உணவில் தயிர், ஒரு சப்ஸி, பட்டாணி கொண்ட காய்கறி புலாவ், மஞ்சள் பருப்பு, ஒரு உருளைக்கிழங்கு டிஷ், சில பீன்ஸ் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் வீட்டில் செய்த சப்பாத்தி மற்றும் உணவுக்கு பிறகான காபியுடன் இணைக்கப்பட்டிருந்தன.

ஆரோக்கியமான உணவின் பாரம்பரியத்தைக் கொண்டு, இந்த முறை சோனம் கபூர் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு சத்தான உணவைச் சமைத்தார். சோனம் கபூர் வறுத்த டோஃபு டிஷ் தயாரித்து, சமையல் செயல்முறையின் வீடியோவையும், இறுதியாகத் தயாரிக்கப்பட்ட உணவின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துள்ளார். எப்படிச் செய்தார் என்பதைப் பாருங்கள்.

இந்த வறுத்த டோஃபு நிச்சயமாக கவர்ச்சியூட்டுவதாகவும் சத்தானதாகவும் தெரிகிறது. பச்சை பீன்ஸ், சிவப்பு குடை மிளகாய், பச்சை குடை மிளகாய் மற்றும் வெங்காய இதழ்கள் ஆகியவற்றின் கலவையில் சமைத்த டோஃபுவை நாம் காணலாம். சோனம் கபூர் தனது கணவரை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தார்!

updtprug
vqrd0178டோஃபு அதன் பல்வேறு சுகாதார நலன்களுக்காகப் புகழ் பெற்றது. இதில் புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளது. நீங்களும் வீட்டில் வறுத்த டோஃபுவையும் செய்யலாம். வறுத்த கேப்சிகம் மற்றும் டோஃபு தயாரிக்க எளிதான செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள்:

 • 350 கிராம் டோஃபு - துண்டுகளாக்கப்பட்டது
 • 1/4 கப் எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
 • 1 கப் வெங்காயம்- பொடியாக நறுக்கியது
 • 1 கப் கேப்சிகம் - பொடியாக நறுக்கியது
 • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
 • தேவையான அளவு உப்பு
 • 2 தேக்கரண்டி வினிகர்
 • அலங்கரிக்க கீரைகள்

செய்முறை:

1. ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் கேப்சிகம் ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும், வெங்காயம் மற்றும் கேப்சிகம் ஈரமாக இருக்கும் வரை அதிக வெப்பத்தில் கிளறவும்.

2. சோயா சாஸ், உப்பு, வினிகர், டோஃபு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

3. நன்கு கலந்து, சில கீரைகள் கொண்டு அலங்கரிக்கவும்.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com