பார்வை குறைப்பாட்டை போக்கும் கீரை மற்றும் பீட்ரூட்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 22, 2018 18:02 IST

Reddit
Spinach And Beetroot Could Help Prevent Vision Loss: Study

கீரை மற்றும் பீட்ரூட்டில் நைட்ரேட் நிறைந்திருக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். மேக்குலார் டிஜெனரேஷன் ( Macular degeneration) என்று சொல்லப்படும் கண் பார்வை குறைபாடு பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படுகிறது. .

தினமும் 100-142 மில்லிகிராம் அளவு நைட்ரேட் இருக்க கூடிய காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு சிறு வயதில் ஏற்படக்கூடிய பார்வை குறைபாட்டை 35 சதவிகிதம் குறைக்கிறது. ஆனால் தினமும் 69 மில்லிகிராமிற்கும் குறைவான நைட்ரேட் நிறைந்த காய்கறிகளை உட்கொள்பவர்களுக்கு கண் பார்வை குறைபாடு நிச்சயமாக ஏற்படும்.

100 கிராம் கீரையில் 20 மில்லிகிராம் நைட்ரேட் இருக்கிறது. அதேபோல 100 கிராம் பீட்ரூட்டில் 15 மில்லிகிராம் நைட்ரேட் இருக்கிறது. முதல் முறையாக, உடலில் நைட்ரேட் அளவு குறைந்தால் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 15 வருடங்களில் ஆஸ்திரேலிய மக்களுள் 49 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2000 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் நைட்ரேட் குறைவால் கண் கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறதென்பது, தெரிய வந்துள்ளது.

அதேபோல், 142 மில்லிகிராமிற்கு அதிகமாக நைட்ரேட் நிறைந்த கீரைகள் மற்றும் காய்கறிகள் உட்கொண்டவர்களுக்கு எவ்வித கூடுதல் நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் தகவல் அளித்துள்ளனர். இந்த குறைபாடு ஏற்பட வயது ஒரு முக்கிய காரணம். இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கீரைகள் மற்றும் பீட்ரூட்டில் அதிகபடியான நைட்ரேட் இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  SpinachVision

Advertisement
Advertisement