ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்! இது மட்டும் போதும்!!

றைவான பால் மற்றும் சர்க்கரை கொண்டே செய்யமுடியும். இதை செய்ய நேரம் அதிகமானாலும் அதன்சுவையோ மிகவும் அலாதியானது.

   |  Updated: September 22, 2020 14:42 IST

Reddit
Palkova - The Delicate Tamil Sweet Made With Just Two Ingredients

சுவையான பால்கோவா

Highlights
  • Pavlova or Paal kova is Tamil for Milk Khoa
  • Just like khoa, its essentially two ingredients milk and sugar
  • It received the prestigious GI tag in 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது பால்கோவாவும் பெருமாளை உருகி காதலித்து அவரையே மணந்து கொண்ட ஆண்டாளும் தான்.

பாரம்பரிய முறையில் பால்கோவா புளியமர விறகுகளைக் கொண்டு பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போதும் கூட புளியமரத்தடி பால்கோவா என்றால் அவ்வளவு பிரசித்தம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, சமீபத்தில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருப்பது இன்னும் இனிப்பான விஷயம்.

வாருங்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் புளியமரத்தடி பால்கோவாவை நம் வீட்டிலேயே செய்யலாம். குறைவான பால் மற்றும் சர்க்கரை கொண்டே செய்யமுடியும். இதை செய்ய நேரம் அதிகமானாலும் அதன்சுவையோ மிகவும் அலாதியானது.

Newsbeep

தேவையானபொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்தூள் - 1 தேக்கரண்டி
நெய்  - 5 மேஜைகரண்டி

செய்முறை:
1.அடிகனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள ஒரு லிட்டர் பாலை எடுத்துசுண்டக் காய்ச்சவும். பால் பொங்கி வரும் போது, மிதமான தீயில் பாலை நன்றாக காய்ச்சவும்.  இதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகவேண்டும்.2. பால் பாதியாகும் வரை காய்ச்சி விட்டு சர்க்கரை சேர்த்து (சுவைக்கேற்ப மேலும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்) அடி பிடிக்காமல் கிளறவும்

3.அடிக்கடி சிறிது நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருங்கள். பாலை சிறிது நேரம் காய்ச்சிய பின்பு கோவா பதத்திற்கு பாத்திரத்திலிருந்து ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.

மேலும் சுவையூட்ட குங்குமப்பூ சேர்த்துகொள்ளலாம்.

4. சுவையானமற்றும்இனிப்பானபால்கோவாதயார்.

(Also Read: )Listen to the latest songs, only on JioSaavn.comDisclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement