ஸ்டார்பக்ஸ் வழங்கும் கலர்ஃபுல் கப்ஸ்!!!

கண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த காபி கப்புகள் மீண்டும் பயன்படுத்து வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 03, 2019 20:13 IST

Reddit
Starbucks Introduces Colour-Changing Cups: 'Obsessed', Says Twitter
Highlights
  • அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • ஐஸ்கட்டிகளை போட்டதுமே கப்புகளின் நிறம் மாறிப்போகும்.
  • விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது.

சமூக வலைதளங்களில் ஸ்டார்பக்ஸ் மீண்டும் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது.  பெரிய அளவு காபி கப்பில் ஒரு புதுமையை படைத்துள்ளது ஸ்டார்பக்ஸ்.  கண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த காபி கப்புகள் மீண்டும் பயன்படுத்து வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இத்துடன் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராவும் கொடுக்கப்படுகிறது.  இந்த பேப்பர் கப் குறித்து சமூக வலைதளத்தில் பிரபலமாக பேசப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் இந்த நிறம் மாறும் கப்புகளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட்டது.  ஸ்டார்பக்ஸ் ஐந்து கலர் கப்புகளை தயாரித்து வெளியிட்டுள்ளது.  இதில் ஐஸ் கட்டிகள் அல்லது திரவங்கள் ஏதேனும் ஊற்றும்போது கோரல் ரெட், மஞ்சள், ரோஸ் பிங்க், கோபால்ட் ப்ளூ மற்றும் டேங்கரின் போன்ற நிறங்கள் மாறுகிறது.  விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலே பெரும்பாலானவை விற்று தீர்ந்துவிட்டது.  மீண்டும் இதேபோன்ற கப்புகள் ரெயின்போ நிறத்தில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு மீண்டும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல பகுதிகளில் இருந்து இந்த கலர்ஃபுல் கப்புகள் குறித்து கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த கப்புகளை வாங்க பலரும் ஆவலாக எதிர்ப்பார்த்து வருகின்றனர்.  இதுகுறித்து, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பல பதிவுகள் வெளியாகி வருகிறது. 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement