புரதம் நிறைந்த 6 காலை உணவுகள் உங்களுக்காக....!!

காலை உணவைத் தவிர்ப்பதற்கு பதிலாக ஈஸீயாக செய்யக்கூடிய இந்த ஹெல்த்தி உணவுகளை செய்து சாப்பிடுங்கள்!

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 04, 2019 12:57 IST

Reddit
Start Your Morning Right With These 6 High Protein Breakfast Ideas
Highlights
  • ஹெல்தியான ஸ்மூத்தி செய்ய மூன்று ஆரோக்கிய பொருட்களே போதுமானது.
  • கடலை மாவை கொண்டு பேன் கேக் செய்து சாப்பிடலாம்.
  • சோயா ஊத்தாப்பத்தில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிகளவு புரதம் உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு மக்களால் பெரிதும் தவிர்க்கப்படுவது காலை உணவு. நாள் முழுவதும் உழைக்க காலை உணவு மட்டுமே மிகச்சிறந்த ஒன்று. காலை உணவைத் தவிர்ப்பதால், உடலுக்குக் காலையில் கிடைக்க வேண்டிய எந்த ஊட்டச்சத்துகளும் கிடைக்காமல் போகும். அதோடு மட்டுமல்லாமல், அடுத்த உணவு வேளையின் போது, பசியின் காரணமாக அதிகம் சாப்பிடத் தோன்றும். இதனால் உடல் எடை அதிகமாகக் காரணமாக அமையும். இதேபோல தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆபத்தான கட்டத்துக்கு உடல் சென்றுவிடும். தினமும் வெறும் 5 நிமிடங்களில் சத்தான காலை உணவை செய்யலாம். அதற்காகத்தான் இந்த அதிக புரதம் நிறைந்த 6 காலை உணவுகள்.

1.எக் பராத்தா (Egg Parantha)

அலுத்துப்போன ரெகுலர் பராத்தாவுடன் 2 முட்டைகளை அடித்துக் கலந்து சமைத்தால் எக் பராத்தா தயார். முட்டை பஜ்ஜி செய்து அதை பராத்தாவின் மீது வைத்தும் சாப்பிடலாம் அல்லது முட்டையை ஃப்ரையிங் பேன் மீது வைத்து அதன் மேல் ப்ரட் வைத்தும் சாப்பிடலாம். 

egg parantha

 

2. ஓட்ஸ் இட்லி (Oats Idli)

ஓட்ஸை ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல் அதில் இட்லி அல்லது உப்மா செய்தும் சாப்பிடலாம். முழுமையான ஹெல்தி காலை உணவு.

oats idli

 

3. ஸ்கரம்பிள்டு எக் வித் சிக்கன் சாஸேஜஸ் (Scrambled Eggs with Chicken Sausages)

அதிகம் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்று இந்த ஸ்கரம்பிள்டு எக்ஸ் மற்றும் சிக்கன் சாசேஜ். சிக்கன் சாஸேஜை ஒரு பேனில் வறுத்து உங்களுக்குப் பிடித்த சீஸனிங் செய்து சாப்பிடலாம்.

scrambled eggs with chicken sausagesசோயா ஊத்தாப்பம் (Soya uthappam)

அதிகபடியான புரதம் மற்றும் குறைவான கொழுப்பு நிறைந்த சோயா மாவில் ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்.  காலை நேர பசியை போக்கும் இந்த ஊத்தாப்பம் மிகவும் சுவையாக இருக்கும். 

soya uttapam recipe

 

5. சிக்பி ஃபிரிட்டர்ஸ் (Chickpea Fritters)

கலோரியில் அதிக கவனம் உள்ளவர்கள் இந்த புரோட்டீன் நிறைந்த பேன்கேக்கை செய்து சாப்பிடலாம். கொண்டைக் கடலை ஹெல்தி மற்றும் டேஸ்டியானதும்கூட.chickpeas 620

 

6.ஆப்பிள் சியா சீட்ஸ் ஸ்மூத்தி (Apple Chia Seeds Smoothie  )

இதை ஈஸியாகவும், வேகமாகவும் செய்து சாப்பிடலாம். ஊட்டச்சத்து மிக்க ஒரு காலை உணவு இது. ஆப்பிளை அரைத்து அதில், யோகர்ட், சியா சீட்ஸ் மற்றும் பீனட் பட்டர் சேர்த்தால் சுவையான ஸ்மூத்தி ரெடி!

apple chia seeds smoothie

 

காலை உணவைத் தவிர்ப்பதற்கு பதிலாக ஈஸீயாக செய்யக்கூடிய இந்த ஹெல்தி உணவுகளை செய்து சாப்பிடுங்கள்!

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com