சம்மரைக் கூலாக்க டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்கள்!

உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டிலிருந்து தடுக்கவும், உடனடி புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய இந்த டீடாக்ஸ் ட்ரிங்ஸை வைத்து கோடையைக் கூலாக்குங்கள்!

   |  Updated: April 04, 2019 13:24 IST

Reddit
Stay Hydrated This Summer With This 3-Ingredient Detox Drink

போர்வையை இழுத்து மூடி தூங்கும் குளிர்காலம் போயே விட்டது. இது சம்மர் சீஸன்! கோடை காலம் வெப்பத்தை மட்டுமல்ல அதற்கு இதமாக பழங்களையும் அதுனுள் சுவையையும், ஊட்டச்சத்தையும் கொண்டு வரும். கொளுத்தும் வெயிலில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டிலிருந்து மிகக் கவனமாகக் காக்க வேண்டும். உடல் வெப்ப நிலை அதிகரிப்பதை தண்ணீர் மட்டுமல்லாமல் சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலமாக, க்ளென்சிங், டீடாக்ஸிங்கூட செய்து ஆரோக்கியத்தைக் காக்கலாம்.இந்த கொளுத்தும் வெயிலில், அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் டீஹைட்ரேட்டாவதில் இருந்து தடுக்கலாம். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து அலுத்து விட்டதா?  நீங்கள் சுவையாக அருந்த பல வழிகள் இருக்கிறது. அதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறோம்  3 டீடாக்ஸ் ரெசிப்பிகள். இதில் சுவை மட்டுமல்லாமல், ஹெல்தியானதும்கூட. இந்த பொருட்களை நமக்கு தந்த இயற்கைக்கு நன்றி சொல்வோம்!

Newsbeepநமக்குத் தேவையானது தண்ணீர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை. ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீர் தாகத்தைப் போக்குவதுடன், புத்துணர்ச்சியும், ஆரோக்கியத்தையும் தரும். இதில் வைட்டமின் C இருப்பதால் செரிமானத்துக்கு ஏற்றது. ஸ்ட்ராபெர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால், உடலை டீடாக்ஸ் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தினமும் இரண்டு முறை இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் குடிப்பதால், புது செல்கள் வளர உதவுகிறது.ஸ்ட்ராபெர்ரி லெமன் வாட்டர் செய்வது எப்படி?

தேவையானவை:

4 ஸ்ட்ராபெர்ரிஸ்

3 எலுமிச்சை துண்டுகள்

Listen to the latest songs, only on JioSaavn.com

2 கப் குளிர்ந்த நீர்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றுங்கள். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதில், துண்டுதுண்டுகளாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையை சேர்த்துக் கலக்குங்கள். சிறிது நேரம் ஊறவைத்து குடியுங்கள். நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வைத்தும் குடிக்கலாம் அல்லது தினமும் இரண்டு முறைக் குடிக்கலாம். உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டிலிருந்து தடுக்கவும், உடனடி புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய இந்த டீடாக்ஸ் ட்ரிங்ஸை வைத்து கோடையைக் கூலாக்குங்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement