எண்ணெய் இல்லாத ஆவி முறுக்கு ரெசிபி

குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத ஆவி முறுக்கு ரெசிபி

NDTV Food  |  Updated: June 01, 2018 12:48 IST

Reddit
Steamed Murukku recipe
Highlights
  • ஆரோக்கியமான எண்ணெய் இல்லா ஆவி முறுக்கு
  • குழந்தைகளுக்கு பிடித்த நொறுக்கு தின்பண்டம்
  • வீட்டில் செய்யக்கூடிய ஆரோக்கியமான தின்பண்டம்
குழந்தைகளுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கடையில் எதோ ஒரு நொறுக்கு தீனியை வாங்குவதற்கு பதில் வீட்டிலே ஆரோக்கியமான உணவை  செய்யலாம்.

ஆவி முறுக்கு ரெசிபி 

1. இட்லி அரிசி - 2 கப்
2. பெருங்காயம் - 2 சிட்டிகை 
3. உப்பு தேவைக்கு ஏற்ப 
4. எண்ணெய் - 3 தேக்கரண்டி 
5. கடுகு  - 1 தேக்கரண்டி
6. உளுந்த பருப்பு  - 1 தேக்கரண்டி 
7. சண்ணா சுண்டல்  - 1 தேக்கரண்டி 
8. காய்ந்த மிளகாய் - 4
9. கறிவேப்பிலை - 1 
10. நறுக்கிய வெங்காயம் - 1 
11.உரித்த பூண்டு துண்டுகள் - 15 

ஆவி முறுக்கு செய்முறை 2 மணி நேரம் அரிசியை ஊறவைக்கவும். அதன் பின்  மஞ்சள் தூள், 2 மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். 

கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த மாவை ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து மாவு கலக்கியப்பின் அடுப்பில் இருந்து  இறக்கவும்.

முறுக்கிற்கு தேவையான மாவை  முறுக்கு குழாயில் எடுத்து இட்டிலி சட்டியில்  பிழியவும். 10-15 நிமிடம் ஆவியில் வேகா வைத்து எடுத்து வைக்கவும்.

தாளிக்கவும்: 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும், அதில் கடுகு, உளுந்தைப்பருப்பு, சன்னா சுண்டல், காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை, வெங்காயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

தாளித்த கலவையை ஆவி முறுக்குடன் சேர்த்து பரிமாறவும். 

குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத ஆவி முறுக்கு தயார் 

ரெசிபி வழங்கியது: ஃபுட் பிளாகர், விஜயலக்ஷ்மி 



Listen to the latest songs, only on JioSaavn.com





Comments 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement