ஆயில் ஸ்கின்னால் தொல்லையா? இந்த மூன்று ஆரஞ்சு ஃபேஸ் பேக்குகள் நிச்சயம் உங்களுக்கு பலன் தரும்!

ஆரஞ்சு சாற்றை தடவினால், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று எண்ணெயை கட்டுப்படுத்தும்.

   |  Updated: April 01, 2019 12:47 IST

Reddit
Struggling With Oily Skin? These Three Orange Face Packs May Work Wonders For Your Skin

கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒருவேளை உங்களுக்கு ஆயிலி ஸ்கின் பிரச்னை இருந்தால், சருமத்துக்கு நீங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துதான் ஆகவேண்டும். கோடை வெய்யிலால் சருமம் வறண்டும் போகலாம், தொடர்ந்து வெய்யில் படுவதால் சருமம் எண்ணெய் வடிந்து காணப்படும். இதனால் பல்வேறு ஸ்கின் பிரச்னைகள் வரலாம். இதுபோன்ற சமயங்களில் நம் வீட்டு சமையலறைகளில் இருக்கும் பொருட்களே இதற்குத் தீர்வாக அமையலாம். அதில் ஒன்றுதான் சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு பழம். ஆரஞ்சு பல விதங்களில் சருமத்துக்கு நல்ல பலன்களை அளிக்கக்கூடிய ஒன்று. ஆரஞ்சு சாற்றை தடவினால், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று எண்ணெயை கட்டுப்படுத்தும். அப்படி சருமத்துக்கு பாதுகாப்புத் தரும் ஆரஞ்சை மூன்று விதமாக பயன்படுத்தலாம். 

Newsbeep

1) ஆரஞ்சு மற்றும் வேம்பு ஃபேஸ் பேக்

தேவையானவை:

ஆரஞ்சு பல்ப் - 3 டேபிள் ஸ்பூன்

பால் - 2 டேபிள் ஸ்பூன்

வேப்பிலை - அரைத்தது, 3 டேபிள் ஸ்பூன் செய்முறை:

ஒரு பவுலில் அரைத்த வேப்பிலையையும் பாலையும் சேர்த்து கலக்கவும். பிறகு அந்தக் கலவையில் ஆரஞ்சு பல்ப்பை சேர்க்கவும். பேஸ்ட் பதத்துக்கு வந்தவுடன், முகத்திலிருந்து கழுத்து வரை அப்ளை செய்யவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் ஆயில் ஸ்கின் மறைந்து புத்துணர்ச்சியுடன் முகம் பிரகாசிக்கும்.

2) ஆரஞ்சு மற்றும் கடலை மாவு பேக்

தேவையானவை:

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் (தேவைக்கேற்ப)

பல்பி ஆரஞ்சு ஜூஸ்  - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கடலை மாவைப் போட்டு கலக்கவும். இதில் தேவைப்பட்டால் ரோஸ் வாட்டரை ஊற்றிக் கொள்ளலாம். இதனால் முகம் ஃப்ரெஷ்ஷாகவும் வாசனையாகவும் இருக்கும். கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வைக்கவும், பிறகு, குளிர்ந்த நீரில் கழுவலாம் அல்லது காட்டன் பஞ்சில் துடைத்து எடுக்கலாம். வாரத்துக்கு மூன்று முறை அப்ளை செய்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

3) ஆரஞ்சு மற்றும் ஓட்மீல் ஃபேஸ் பேக்

தேவையானவை:

ஓட்மீல் - 1 டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

Listen to the latest songs, only on JioSaavn.com

இரண்டையும் ஒரு பவுலில் சேர்த்துக் பேஸ்ட் பதத்துக்குக் கலக்கவும். பேஸ்ட் இப்பொழுது ஸ்கரப்பர் போன்று இருக்கும். முகத்தைச் சுற்றி அப்ளை செய்து 10-12 கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

கெமிக்கல்கள் நிறைந்த ஃபேஸ் பேக்குகளை தூக்கியெறிந்து விட்டு வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஆயில் ஸ்கின்னுக்கு குட்பை சொல்லுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement