தொப்பையை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வருகிறது

Shubham Bhatnagar  |  Updated: September 22, 2018 16:20 IST

Reddit
Weight Loss: Struggling With Upper Belly Fat? 10 Pointers To Lose Weight and Tackle The Bulge
Highlights
  • நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வருகிறது.
  • ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் உடல் எடையை அதிகரிக்கும் அல்லது தொப்பையை உருவாக்
  • மன அழுத்தமும் உடல் எடை மற்றும் தொப்பை வர காரணம்.

தொப்பை எல்லோருக்கும் இருக்கக்கூடியது. நமது வாழ்வியல் முறை சரியாக இல்லாத போது தானாக தொப்பை வருகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவை தடைப்படும்போது, உடலின் அமைப்பே மாறுகிறது. தொப்பை எதனால் வருகிறது என்றும் அதனை எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.

வயிற்று பகுதியில் தசை அதிகரிக்க ஐந்து காரணங்கள்

1. ஆரோக்கியமற்ற உணவுகள்

சீஸி ஃப்ரை, சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, ஜிலேபி போன்றவை உடலில் சத்துக்களை ஏற்றுகிறதோ இல்லையோ, உடல் எடையை அதிகரிக்கும் அல்லது தொப்பையை உருவாக்கும். இவ்வாறான உணவுகளில் உடலுக்கு தேவையான எந்த ஆரோக்கியமும் கிடையாது. துரித உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது, உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து, இடுப்பின் அளவை பெரிதாக்குகிறது.  
 

unhealthy food

 துரித உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது, இடுப்பின் அளவை பெரிதாக்குகிறது.  

2. உடற்பயிற்சி செய்யாதிருத்தல்

கார்டியோ வொர்க் அவுட் செய்வதால், தொப்பை குறையும் என்று நீங்கள் நம்பினால், அது முற்றிலும் தவறு. தினமும் யோகா, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை செய்வதால், இதயம் பலப்படுவதோடு, தட்டையான வயிற்றை பெறுவீர்கள். எடை தூக்கும் பயிற்சி செய்யும்போது, உடலில் உள்ள தசைகள் வலு பெறுவதோடு, உடலில் உள் ள கொழுப்புகள் எரிக்கப்படும். தசைகளிலுள்ள கொழுப்புகள் மட்டுமே குறைக்கப்படும் என்பதனால், நல்ல கட்டுடல் கிடைக்கும்.

3. மன அழுத்தம்

பரபரப்பான வாழ்க்கை சூழலில் வேலை பளு, குடும்ப சுமை, பொறுப்புகள், புறச்சூழல் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தமும் உடல் எடை மற்றும் தொப்பை வர காரணம். மன அழுத்தமானது உடலில் கார்டிசாலை சுரக்க செய்கிறது. இது உடல் இயக்கத்துக்கு தேவையானதை விட அதிகமாக, கல்லீரலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது.  
 

stress

மன அழுத்தம் கல்லீரலில் இருந்து சர்க்கரையை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது.  

4.ஒழுங்கற்ற தூக்கம்

குறைவான அல்லது ஒழுங்கற்ற தூக்கமும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர காரணம். ஆறு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு உடலின் வடிவம் அல்லது அமைப்பே மாறக்கூடும். தூக்கம் குறையும்போது, உடல் எடை தானாக உயரும்.  

5. வயது முதிர்வு

காலப்போக்கில் வயது முதிர்வு காரணமாக உடலில் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடக்கும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை கூடும்.  உள்ளுறுப்புகளில் சேரும் கொழுப்பானது, உடலில் பல நோய்களை உருவாக்கும் தன்மையுடையது.  


 

pvtaofs

காலப்போக்கில் வயது முதிர்வு காரணமாக உடலில் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடக்கும்.

தொப்பையை குறைக்க 5 வழிகள்

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நம் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றிவிடும். சோடா மற்றும் ஹெல்த் ட்ரிங்ஸ் தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடிப்பதுதான் உடலுக்கு நன்மை பயக்கும். இருக்கமான கொழுப்புகளை கரைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. காலை எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிப்பதால், சருமத்தை மற்றும் உடலை ஈரப்பதத்துடன் இருக்கும்.  மேலும் உடல் எடை குறையும்.  
 

sit and drink water

காலை எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும்.

 

2. மன அழுத்தத்தை குறைக்கும் உணவை சாப்பிடலாம்

வீட்டிலேயே இருக்கக்கூடிய எளிமையான சில உணவுகள் கூட நம் மன அழுத்தத்தை குறைக்க கூடியது. காலை உணவாக ஒரு கப் ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களில் மன அழுத்தத்தை சரிசெய்யும் ஆற்றல் உண்டு.  நம் சந்தோஷமாக இருக்க நம் உடலில் இயற்கையாகவே செரோடோனின் என்னும் இரசாயனம் சுரக்கிறது.  ஓட்ஸ் செரோடோனின் சுரப்பை தூண்டுகிறது.   மேலும், தேங்காய், பருப்பு வகைகள், வைட்டமின் பி நிறைந்த உணவுகள் எல்லாமே இயற்கையாகவே நம் மன நலனை மேம்படுத்தும் உணவுகள்.

 3. ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்
    

துரித உணவுகள், சிப்ஸ், கேக், குக்கீஸ் போன்ற இனிப்பு வகைகள் தவிர்த்து காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.  மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடாமல், ஆறு வேளையாக பிரித்து சாப்பிடலாம்.  க்ளைசமிக் இண்டக்ஸ் அதிகம் உள்ள உணவை சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு தங்கிவிடுகிறது.  இதனால் உடல் எடை அதிகரிக்கும்.  மேலும் செரிமான கோளாறு ஏற்பட்டு, உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்காமல் போகும்.  

healthy diet

மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடாமல், ஆறு வேளையாக பிரித்து சாப்பிடலாம்.

4. எட்டு மணி நேர உறக்கம்

தூக்கம் குறைவானால், உடலில் வளர்சிதை மாற்றம் தாமதமாகும்.  க்ரெலின் மற்றும் லெப்டின் என இரண்டு ஹார்மோன்கள் உடலில் மிக முக்கியமான வேலையை செய்கிறது.  நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் மற்றும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை இந்த க்ரெலின் ஹார்மோன் தீர்மானிக்கிறது.  உணவு மற்றும் உறக்கத்தை போதுமென நினைக்க வைக்கும் ஹார்மோன் லெப்டின்.  இப்படியான உணர்வு ஏற்பட்டால், உங்கள் உடலில் லெப்டின் அளவு குறைவாக உள்ளதென்று அர்த்தம்.  அதனால், தினமும் எட்டு மணி நேர உறக்கம் உடலுக்கு நிச்சயம் தேவை.  உறக்கம் கெடும்போது, ஆரோக்கியம் கெட்டு உடல் எடையும் அதிகரிக்கும். 

5. வாரத்தில் நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம்

ஜாக்கிங், யோகா, நீச்சல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை வாரத்தில் நான்கு நாட்கள் நிச்சயம் செய்திருக்க வேண்டும்.  தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதனால் கலோரிகள் எரிக்கப்பட்டு, தசைகள் வலுவடைந்து, உடலுக்கு நல்ல அமைப்பு கிடைக்கிறது.  தொப்பையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உணவு பழக்கத்தை மாற்றுங்கள், நிறைய நீர் அருந்துங்கள், மன அழுத்தத்தை தவிர்த்து, எட்டு மணி நேர உறங்குங்கள், தினசரி உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.  இவற்றை எல்லாம் நீங்கள் சரியாக செய்து வந்தால் தானாகவே தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை பெறலாம்.

smoking health exercise

மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடாமல், ஆறு வேளையாக பிரித்து சாப்பிடலாம்.

CommentsAbout Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement