ஒபிசிட்டிக்கு காரணம். மன அழுத்தமா…? ஆய்வு சொல்லும் பதில் இதோ…

இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர் சமூக பொருளாதார பின்னணியிலிருந்து உளவியல் ரீதியான துன்பம், உணர்ச்சி வசப்படுதல் மற்றும் பின்னடைவு குறித்த கேள்விகளை முன்வைத்து கேள்வித்தாள் உருவாக்கினார்.

Edited by: Saroja (with inputs from ANI)  |  Updated: May 10, 2019 15:13 IST

Reddit
Study Suggests Link Between Emotional Eating, Stress and Obesity

குறைந்த சமூக பொருளாதார நிலை, மன அழுத்தம் மற்றும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க விரும்புகின்றனர்.

குறைந்த வருமானம் உள்ளவர்கள் உளவியல் ரீதியான மன அழுத்தம் காரணமாக  பருமனாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வாளர்கள் குறைந்த சமூக பொருளாதார நிலை, மன அழுத்தம் மற்றும்  உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க விரும்புகின்றனர். 

இந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள அதிகமாக உணவை சாப்பிடுகின்றனர் என்பதை விளக்க முயற்சிக்கிறது. மக்கள் உளவியல் ரீதியான துன்பத்தை எதிர்கொள்ள  சாப்பிடுவதை வழக்கமாக்கியுள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு ஒபிசிட்டி  குறித்த பத்திரிகையில் வெளியிடப்பட்டது. வட மேற்கு  இங்கிலாந்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்  சமூக பொருளாதார பின்னணியிலிருந்து உளவியல் ரீதியான துன்பம், உணர்ச்சி வசப்படுதல் மற்றும் பின்னடைவு குறித்த கேள்விகளை முன்வைத்து கேள்வித்தாள் உருவாக்கினார். ஆய்வின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள் தங்களின் வருமானம் மற்றும் கல்வி, சமூக பொருளாதார நிலை, தங்களின் எடை, உயரம் ஆகியவற்றை குறிப்பிட்டனர். 

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக, ஏற்படும் மன அழுத்தம் கலோரி அதிகமுள்ள அடர்த்தியான உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. உடல் எடைக்கு உளவியல் மற்றும்  உணர்ச்சி பூர்வ  காரணங்கள் அதிமுக்கிய காரணமாகிறது. 


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement