கோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி-புதினா ஸ்லஷ்! ரெசிபி உள்ளே

தர்பூசணிகள் எடையால் 92 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளன, இது இந்த பருவத்தில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.

NDTV Food  |  Updated: June 01, 2020 20:24 IST

Reddit
Summer Diet: Beat The Heat With This Quick Watermelon-Mint Drink (Recipe Inside)

வீட்டில் தயாரிக்கலாம் தர்பூசணி-புதினா ஸ்லஷ்.

Highlights
  • தர்பூசணி மிகவும் விரும்பப்படும் கோடை பழங்களில் ஒன்றாகும்
  • இது நம்மை நீரேற்றமாக வைத்திருப்பதைத் தவிர சுகாதார நலன்களும் தரும்
  • வீட்டில் முயற்சி செய்யக்கூடிய ஒரு அற்புதமான தர்பூசணி ஸ்லஷ் ரெசிபி இங்கே

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதனால், கொஞ்சம் குளிர்ச்சியான மற்றும் சீசனல் பழங்களைச் சாப்பிட வேண்டியது அவசியம். மாம்பழம் முதல் அன்னாசிப்பழம் வரை, பழங்கள் பல சுவையான கோடைக்கால விருந்துகளாக உள்ளன - அவற்றில் ஒன்று தர்பூசணி. உமிழும் சூடான நாளில் குளிர்ந்த தர்பூசணியின் சுவை இருப்பதன் திருப்தியை நீங்கள் அனைவரும் நிச்சயமாக தொடர்புப்படுத்தலாம்! அதைத் தவிர, தர்பூசணி பல ஜூஸ்கள் மற்றும் இனிப்பு வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். எனவே இந்தக் காலத்தில், தர்பூசணியைக் கொண்டு சுவையான ஜூஸ்கள் தயாரிக்கலாம். இந்தக் கோடைக் காலத்தில் தர்பூசணி-புதினா ஸ்லஷ் தயாரித்து, வெப்பத்தைச் சமாளியுங்கள்.

தர்பூசணி மற்றும் புதினாவின் நன்மைகள்:

தர்பூசணிகள் எடையால் 92 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளன, இது இந்த பருவத்தில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. இது வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, மிதமான அளவு பொட்டாசியம் உள்ளது. பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. தர்பூசணியில் லைகோபீன் நிறைந்துள்ளது (இது பழத்திற்குச் சிவப்பு நிறத்தைத் தருகிறது) மற்றும் கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

mc1rlbgo

தர்பூசணி-புதினா ஸ்லஷ் தயாரிப்பதற்கான ரெசிபி:

தேவையான பொருட்கள்:

தர்பூசணி- 2 கப் (க்யூப்ஸ்)

புதினா இலைகள்- 5-6

எலுமிச்சை- 1

 நொறுக்கிய ஐஸ் கட்டிகள் - அரை கோப்பையை விடச் சற்று குறைவாக

சர்க்கரை- தேவைப்பட்டால்

செய்முறை:

1. தர்பூசணியில் இருந்து விதைகளை நீக்கவும். மிக்ஸியில் அரைக்கவும்.

2. புதினா இலைகளைக் கழுவி, தர்பூசனுயுடன் சேர்த்து அரைக்கவும்.

3. பிறகு அதில், எலுமிச்சை சாறு மற்றும் நொறுக்கிய ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து பிறகு அரைக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

4. அரைத்த ஜூஸை கிளாசில் ஊற்றி, தர்பூசணி துண்டுகள் வைத்துப் பரிமாறவும்.

தர்பூசணி-புதினா ஸ்லஷ் கோடைக்காலத்தில் விருந்தினர்களுக்குச் சரியான வரவேற்பு பானமாகவும் செயல்படுகிறது. இன்று அதை வீட்டில் தயார் செய்து மகிழுங்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement