கோடையில் கண்களை பராமரிக்க எளிய குறிப்புகள்

இந்த வெயில் காலத்தில் உங்கள் முகத்துடன் கண்களின் அழகையும் பராமரிக்க ஒரு சில வழிகள்.

Dr. Deepali Bhardwaj, Skin Care Expert  |  Updated: May 30, 2018 17:28 IST

Reddit
Summer Eye Care: 8 Kitchen Ingredients For Healthy And Relaxed Eyes
Highlights
  • சூடான வெப்பம் மற்றும் சூரியன் கண்களை பாதிக்கும்
  • வறட்சி, அரிப்பு மற்றும் கருவளையங்கள் கோடை காலத்தில் மிகவும் பொதுவானவை
  • கண் அலர்ஜிகல் அதிகம் வர வாய்ப்புள்ளது
நம் முகத்திற்கு அழகு சேர்ப்பது கண்கள் தான், கண்கள் சோர்வடைந்தால் முகத்தின் பொலிவு இழந்துவிடும். இந்த வெயில் காலத்தில் உங்கள் முகத்துடன் கண்களின் அழகையும் பராமரிக்க ஒரு சில வழிகள். இந்த கோடையில் உங்கள் சமையலறையில் இருந்து நேரடியாக பயன் படுத்தக்கூடிய ஆரோக்கியமான, தளர்வான கண்களுக்கு சில எளிமையான உதவிக்குறிப்புகள்.

1.குளிர்ந்த நீர் 

முதலில் தினமும் பல முறை உங்கள் கண்களை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது கண்களுக்கு புத்துணர்வை தரும்; அல்லது பஞ்சில் தண்ணீரில் முக்கி 10 நிமிடம் கண்ணில் வைத்து எடுக்கவும். இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்தி கண்களை தளர்த்தும். 
aloe vera

2. கற்றாழை 

கற்றாழை சாறை ஐஸ் கட்டிகளாக உறையவைத்து கண்களில் வைத்து வந்தால் உலர்ந்த கண்கள் புத்துணர்வை கொடுக்கும் 

3. வெள்ளரிக்காய் 

அதிக நீர் சத்துக்கொண்ட வெள்ளரிக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. குளிரூட்டிய வெள்ளரிக்காயை அறுத்து கண்களில் 10 நிமிடம் வைத்து வந்தால் பொலிவிழந்த கண்கள் புத்துணர்வு அடையும்.

4. உருளை கிழங்கு 

கருவளையம்  மற்றும் கண் வீக்கத்திற்கு ஒரு முக்கிய தீர்வு உருளை கிழங்கு. உருளை கிழங்கின் சாறை எடுத்து பத்து நிமிடம் கண்ணில் வைத்து வந்தால் சுருக்கம், கருவளையம், கண் வீக்கம் குறையும். தெடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
 

potatoes

5. ரோஸ் வாட்டர் 

கண் எரிச்சலா உங்களுக்கு உடனடி தீர்வு ரோஸ் வாட்டர் தான். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் கண் எரிச்சல் குறையும். 
 

கோடைக்காலத்திற்கான கண் பாதுகாப்பு குறிப்புகள் 

1. எ சி காற்று நேரடியாக கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எ சி காற்று கண்களை உலர்த்தி சேதமடைய செய்யும். 

2. uv கதிர்களில் இருந்து கண்ணை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து செல்வது நல்லது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

3. அதிகமாக தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாக வையுங்கள் 

4. படுக்கும் முன் கண் மேக்கப்களை மறக்காமல் கலைத்து விட வேண்டும் 

Commentsகண்களை பராமரிக்க இந்த குறிப்புகளை நிச்சயம் பின்பற்றுங்கள்  ​உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement