உடலை குளிர்ச்சியாக்கும் புதினா!!!

புதினா உடல் மற்றும் மன சோர்வை நீக்கும்.  மேலும் மூளையின் செயல்திறனை அதிகரித்து, ஞாபகத்திறனையும் அதிகரிக்கும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 03, 2019 17:07 IST

Reddit
Summer Health Tips: Add Mint Or Pudina To Your Drinking Water To Stay Cool Naturally
Highlights
  • புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • குடிதண்ணீரில் புதினா சேர்த்து குடிக்கலாம்.
  • தலைவலியை நீக்கும் தன்மை புதினாவிற்கு உண்டு.

கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலை குளுமையாக வைத்து கொள்ளவும் நாம் அடிக்கடி எலுமிச்சை சாறு, தர்பூசணி, இளநீர், மோர் என குடிப்பது நல்லது.  இந்த வெப்பத்தால் சருமம் மற்றும் கூந்தலும் பாதிப்படைகிறது.  சருமத்தை பாதுகாக்க ஸ்கார்ஃப் மற்றும் சன்ஸ்க்ரீன், கண்களுக்கு சன்கிளாசஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.  அதுபோக, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம். தர்பூசணி, முலாம்பழம், பெர்ரீஸ் மற்றும் எலுமிச்சையில் நீர்ச்சத்து அதிகம்.  கூடுதலாக உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.  வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்.  நீங்கள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என எங்கு சென்றாலும் கூடவே தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்.  அதில் புதினா சேர்த்து கொண்டால் தண்ணீர் வாசனையாகவும் இருக்கும்.  உடல் சூடும் தணியும். 

doqb2ii8 

புதினாவின் நன்மைகள்:

உடலை ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ள தண்ணீரே போதுமானது.  அத்துடன் புதினா சேர்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  புதினா சேர்க்கப்பட்ட நீரை குடிக்கும்போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.  புதினா உடலில் சிறந்த க்ளென்சராக செயல்படுகிறது.  புதினாவின் மேலும் சில நன்மைகளை பார்ப்போம். சருமத்தை ஃப்ரஷாக வைத்திருக்கும்:

புதினாவில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது.  இது சருமத்தை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.  குறிப்பாக கோடை காலத்தில் சருமத்தின் ஆரோக்கியம் காக்க புதினாவை பயன்படுத்தலாம். பருக்களை விரட்டும்:

கோடை வெப்பத்தால் முகத்தில் நிறைய எண்ணெய் சுரப்பிகள் செயல்பட்டு அதிகபடியான எண்ணெய் வெளியேறும்.  இதன் விளைவாக முகப்பருக்கள் நிறைய வந்துவிடும்.  புதினாவில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் பருக்கள் வராமல் பாதுகாக்கும். 4mp64m5o 

செரிமானம் சிறப்பாக இருக்கும்:

கோடை காலத்தில் செரிமான பிரச்னை ஏற்படுவது வழக்கம்தான்.  புதினாவில் மெந்தால் என்னும் பொருள் இருப்பதால் செரிமான பிரச்னை தீர்ந்து செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.தலைவலியை போக்கும்:

வெப்பத்தால் சிலருக்கு தலைவலி உண்டாகும்.  அது பெரும்பாலும் உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் வரும் விளைவு.  இதன் ருசி, நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. ஞாபக சக்தியை அதிகரிக்கும்:

புதினா உடல் மற்றும் மன சோர்வை நீக்கும்.  மேலும் மூளையின் செயல்திறனை அதிகரித்து, ஞாபகத்திறனையும் அதிகரிக்கும். 

Listen to the latest songs, only on JioSaavn.comபுதினா இலைகளை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி கொள்ளவும்.  பின் அவற்றை தண்ணீர் பாட்டிலில் போட்டு வைத்து பின் அந்த நீரை குடிக்கலாம்.  இவ்வாறு தொடர்ச்சியாக குடித்து வந்தால் கோடை வெப்பத்தால் உண்டாகும் உடல் உஷ்ணத்தில் இருந்து தப்பலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement