கோடை காலத்திற்கு ஏற்ற வ்ராப் ரெசிபிகள்!!

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் மதிய உணவை சாப்பிட முடியாது.  அப்போது சில எளிய உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 23, 2019 18:43 IST

Reddit
Summer Lunch Diet: 5 Healthy And Light Wrap Recipes For Lunch
Highlights
  • ஆரோக்கியமான வ்ராப் உங்கள் மதிய நேர பசியை போக்கும்.
  • பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு எடுத்து செல்ல எளிமையாக இருக்கும்.
  • ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவை சாப்பிடலாம்.

தினமும் ஒரே மாதிரியான மதிய உணவு சாப்பிட்டு சலித்துவிட்டதா? ரொட்டி மற்றும் சப்ஜி தான் பெரும்பாலானவர்களின் சாய்ஸாக இருக்கிறது.  இதனை தவிர்த்து தயாரிப்பதற்கு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும் சில ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில ஸ்பெஷல் வ்ராப் ரெசிபிகள் உங்களுக்காக...பனீர் மற்றும் சால்சா டார்டிலா ரெசிபி:

காட்டேஜ் சீஸ், தக்காளியின் புளிப்பு சுவை, பனீர் ஆகியவை சேர்த்து ஃப்ரஷாக தயாரிக்கப்படும் இந்த வ்ராப் உங்கள் மதிய நேர பசியை போக்கிவிடும்.  மிகவும் லைட்டான இந்த உணவு ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. ஸ்பைசி சிக்கன் லீட்யூஸ் வ்ராப்:

அதிகபடியான புரதம், குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான கலோரிகள் கொண்ட இந்த வ்ராப்பில் சிக்கன், காய்கறிகள் மற்றும் லீட்யூஸ் இலைகள் சேர்க்கப்பட்டுள்ளது.  இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.  மேலும் உடல் எடை குறைப்பிற்கு இதனை சாப்பிடலாம். g9d2ifl8

ஹேசல்நட் ஏசியன் லீட்யூஸ் வ்ராப்:

அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த பிரட்டை சாப்பிடுவதை காட்டிலும் லீட்யூஸ் இலைகளை பயன்படுத்தி உங்கள் ரெசிபியை தயார் செய்யலாம்.  லீட்யூஸ் இலைகளின் மேல் சிக்கன் மற்றும் ஹெசல்நட், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.  

acmpr24

 

சில்டு ரைஸ் வ்ராப்:

காட்டேஜ் சீஸ், மஷ்ரூம், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிதளவு சாதம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த வ்ராப்பில் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.  கலோரிகள் மிகவும் குறைவு. 

wrap

ஸ்பைஸ்டு ஃபிஷ் வ்ராப்:

க்ரில்டு ஃபிஷ் ஃபில்லட்டுடன் டார்டிலாஸ், லீட்யூஸ் சேர்த்து வ்ராப் செய்து சாப்பிடலாம்.  இது உங்களை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

q77juh78

 

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் மதிய உணவை சாப்பிட முடியாது.  அப்போது சில எளிய உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது.  மேலும் எடுத்து செல்வதற்கு எளிமையானது.  வேலை நேரத்தில் இதனை எடுத்து சென்று சாப்பிடலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement