ஆலு கா ரைட்டாவை இனி வீட்டிலேயே தயாரியுங்கள்!

தயிரின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஏற்கனவே நிறைய கூறப்பட்டுள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியத்தின் சிறந்த இயற்கை மூலங்களில் ஒன்றாகும். மேலும், புரதத்த சத்தின் மூலமாகும் - இது தசைகளை அதிகரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.

   |  Updated: June 26, 2020 18:23 IST

Reddit
Summer Special: This Quick Aloo Ka Raita Is All You Need To Sail Through Hot Noons 

தயிர் சூப்பர் லைட் மற்றும் உங்கள் வயிற்றை அமைதியாக வைத்திருக்கும்

Highlights
  • Curd is a summer staple we cannot get enough of
  • Curd is probiotic in nature
  • Raita is a made with yogurt, herbs and vegetables

ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதினை கொண்ட இந்த மாதத்தில் பிற்பகல் வேளையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது சற்று சலிப்பானதாக இருந்தாலும், வேறு ஒரு வழி இல்லாத நிலையேயுள்ளது. வெளியில் உள்ள வெப்பநிலை உங்களை வியர்வையில் நனைத்து சோர்வடையச் செய்யலாம்,  இப்போது நம் உடலுக்கு நாம் செய்யக்கூடியது வீட்டினுள் தங்கி குளிர்ந்த மற்றும் இலகுவான உணவுகளை உட்கொள்வதாகும். வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றை நம் உணவுமுறைகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு கோடை உணவு தயிர் அல்லது தாஹி.

தயிரின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஏற்கனவே நிறைய கூறப்பட்டுள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியத்தின் சிறந்த இயற்கை மூலங்களில் ஒன்றாகும். மேலும், புரதத்த சத்தின் மூலமாகும் - இது தசைகளை அதிகரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது. வழக்கமான முறையில் தயிர் சாப்பிடுவது நம் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க உதவுகிறது. மேலும், இது நமது செரிமானத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. அதனால்தான் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் நம்முடைய அன்றாட உணவில் தயிர் கிண்ணத்தை சேர்க்க பரிந்துரைக்கின்றனர்.

(Also Read: )

l85sslto

தயிரின் வெற்று சுவை உங்களுக்கு ஒரு சலிப்பானதாக இருந்தால், ரைட்டாவைத் தயாரிக்க முயற்சிக்கவும். ரைட்டாக்களில் பல வகை உண்டு.  கீரே கா ரைட்டா, அன்னாசி ரைட்டா, லக்கி ரைட்டா, பூண்டி கா ரைட்டா போன்றவை சில உதாரணங்களாகும். ஆனால் நீங்கள் எப்போதாவது ஆலு கா ரைட்டாவை முயற்சித்தீர்களா? இந்த செய்முறை மூலமாக செய்து பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சில உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மற்றும் துண்டுகளாக செய்யுங்கள். விரும்பிய நிலைத்தன்மையைப் பெறும் வரை சிறிது தயிரை சேர்த்துக்கொள்ளுங்கள். தயிரில் வேகவைத்த உருளைக்கிழங்கை நனைத்து, சிறிது உப்பு, கருப்பு மிளகு, சீரகம் மற்றும் சிவப்பு மிளகு தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். புத்துணர்ச்சிக்காக சில கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகளையும் ரைட்டாவில் சேர்க்கலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Click here for this step-by-step aloo ka raita recipe from NDTV Food.

கீழேயுள்ள கருத்துகள் பிரிவில் நீங்கள் அதை எவ்வாறு செய்தீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement