சூரிய கிரகணமும் மூட நம்பிக்கையும்!

   |  Updated: January 06, 2019 11:22 IST

Reddit
Surya Grahan 2019: Diet Myths Related To Partial Solar Eclipse Busted
Highlights
  • இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து மணிக்கு தெரியும்
  • அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து பார்க்கலாம்
  • கிரகணத்தின் போது சில வீடுகளில் காய்கறி, பழங்களை கூட நறுக்க மாட்டார்கள்

2019 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் (Surya Grahan 2019) ஜனவரி 6, ஞாயிற்றுக்க்கிழமை அன்று காணப்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணம் மனிதர்களின் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் எனவும், தொழில்நுட்ப ரீதியில் பார்த்தோமானால் ஜனவரி 5-6 என இரண்டு நாட்கள் இருக்கும் என்பதும் கூடுதல் தகவல். இந்திய துணை கண்டத்தில் இருக்கக்கூடிய மக்களால் மட்டும் இந்த கிரகணத்தை காண முடியாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் அளித்துள்ளது.

சூரிய கிரகணம் தோன்றும் நேரம்:

ஜனவரி 6 ஆம் தேதி அன்று நிலவு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடக்கும் தருணத்தில் பூமி சற்றே இருள் சூழ்ந்து இருக்கும். இந்த சூரிய கிரகணம் பூமியின் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நிகழும். இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து மணிக்கு தெரியும். நீங்கள் இந்த சூரிய கிரகணத்தின் முழு அழகையும் உங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வழியாக பார்த்து ரசிக்கலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து பார்க்கலாம்.

piflbdeg

சூரிய கிரகணமும் – மூட நம்பிக்கைகளும்:

சூரிய கிரகணத்தின் போது வெளிப்படும் கதிரில் நச்சுக்கள் இருக்கும் என்றும் அவை நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருட்களை விஷத்தன்மை மிகுந்ததாக மாற்றிவிடும் என்றும் பொதுவாக சில மூடநம்பிக்கைகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. சூரிய கிரகணத்தின் போது சில வீடுகளில் காய்கறி, பழங்களை கூட நறுக்க மாட்டார்கள். சமைப்பதை தவிர்த்து விடுவார்கள்.

சூரிய கிரகணத்தின் போது உணவு உண்பதால் மற்றும் நீர் அருந்துவதால் கெடுதல் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கிரகணத்தில் போது வீட்டில் உள்ள உணவு பொருட்கள் நஞ்சு நிறைந்ததாக மாறும் என்றால் வயலில், மரத்தில் என இயற்கையோடு கலந்திருக்கும் உணவு பொருட்கள் அனைத்துமே நஞ்சு நிறைந்ததாக மாறிவிடும் என்பதையும் யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறான கூற்றுகள் எல்லாம் முற்றிலுமே கட்டுக்கதை மட்டுமே என்று நாசா தெரிவித்துள்ளது. அதனால் சூரிய கிரகணத்தின் போதும் உங்கள் அன்றாட வாழ்க்கையை தொடரலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement