ஃபுட் டெலிவரி வேலைக்கு பெண்களை நியமிக்கும் ஸ்விகி நிறுவனம்

NDTV Food  |  Updated: November 15, 2018 21:12 IST

Reddit
Swiggy appoints women for food delivery

ஆன்லைன் மூலம் உணவை விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விகி ( Swiggy)2019 மார்ச் முதல் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு 2,000 பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. ஆண், பெண் என இருவரும் இணைந்து வேலை செய்யும் வகையிலான வேலைச் சூழலை உருவாக்க ஸ்விகி நிறுவனம் முன்வந்துள்ளது.

தற்போது கொச்சி, புனே, அகமதாபாத்,கொல்கத்தா, நாக்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உணவை டெலிவரி செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்விகி நிறுவனம் ஆண், பெண் இருவருக்குமான ஒருங்கிணைந்த பணியிடத்தை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஸ்விகி நிறுவனம் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் நாட்டில் பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து, பெண்களை மாலை 6 மணிவரை உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகிறது. பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்விகி நிறுவனம் நாடு முழுவதும் 45,000 உணவகங்களுடன் இணைந்து மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமாக இருந்து வருகிறது.

ஸ்விகியின் துணைத்தலைவர் சச்சின் கோட்டக்கல் “இந்தத் தொழிலை நிலையான முறையில் விரிவுபடுத்த நினைக்கிறோம். இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் உணவக உரிமையாளர்களும் தொடர்ச்சியான வருமானத்தை பெற அவர்களுடன் இணைந்து பணிபுரிவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனம் ஃபுட் பாண்டாவை (Food panda) உரிமையாக்கியுள்ளது. மேலும் ஃபுட் பாண்டவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது. உணவு விநியோகத்தின் மற்றொரு முக்கிய நிறுவனமாக உபர் ஈட்ஸும் (Uber Eats) இந்த துறையில் தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள முயன்றுவருகிறது.

ஃபுட் டெலிவரி நிறுவனங்களின் இந்த தொழில் முனைப்பு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள், தன் ஊழியர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடுகள், மாதாந்திர ஊக்கத்தொகைகள் மற்றும் பைக் வாங்க கடன் உதவிகள் செய்யவும் திட்டமிட்டு வருகின்றன.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement